பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அதியன் விண்ணத்தனார்

பூத்த மலர்களினின்றும், கொத்துக்கொத்தாக மலர்ந்த கொன்றை மலர்களினின்றும், மணம் நிறைந்த கொடியில் பூத்த மலர்களினின்றும், கைபோலும் காந்தள் மலர்களினின்றும் எழுந்த பல்வேறு மணங்களும் கலந்து வந்த தென்றல் விசும் சிறப்புடையது என்று கூறிச் சிறப்பிக்கின்றார். ஆசிரியர் இளங்கோவடிகள், பொதிகைத் தென்றல் சந்தனம் நாறும்; மதுரைத் தென்றல் மலர்களின் மணம் நாறும் எனச் சிலப்பதிகாரத்தே கூறுவதோடு இஃது ஒத்திருத்தல் காண்க.

“வீழ்தும்பி வண்டொடு மிஙிறார்ப்பச், சுனை மலரக்,
கொன்றை கொடியிணர் ஊழ்ப்பக் கொடிமலர்
மன்றல மலர, மலர்காந்தள் வாய்நாற
நன்றவிழ் பன்மலர்நாற கறை பனிப்பந்
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்மநின்
குன்றத்தாம் கூடல் வரவு.” (பரிபாடல், அ : உஙு-அ)

மறுமிடற்றண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர் செல்வனாம் பரங்குன்றுறை செவ்வேளை வழிபடச் செல்வார், வழிபாட்டிற்குரிய பொருள்களோடு சென்று வழி பட்டு, ‘ஐய! கணவரோடு கைகோத்து ஆடி மகிழ்ந்ததாகக் கண்ட கனவு பொய்யாகாமல், யாம் மகிழ்ந்து ஆடுமாறு நினவையை பெருக்கெடுத்து வருக!’ எனவும், ‘ஐய! எமக்கு மகப்பேறு உண்டாக மனம் இரங்குக !” எனவும், “ஐய! யாம் எடுத்த வினை இடையூறின்றி முடிந்து பெரும் பொருள் நல்குமாக!” எனவும், “ஐய! யாம் மேற்கொண்டு செல்லும் போரில் வெற்றி வாய்க்குமாக!” எனவும், அவரவர் விரும்பும் வரம்வேண்டி நிற்கும் பக்திநிலையினைப் பார்த்துப் பரவசமுற்றுப் பாடுகிறார் புலவர்:

“அருவரைச் சேராத், தொழுநர்
கனவில் தொட்டது கைபிழை ஆகாது
நனவில் சேஎப்பநின் னளிபுனல் வையை

வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்,