பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

39

கருவயிறு உறுகெனக் கடம்படுவோரும், செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும், ஐயமர் அடுகென அருச்சிப் போரும் பாடுவார்.” (பரிபாடல்: அ, கoஉ கoக).

பரிபாடற்கண், வையை வெள்ளத்தினையும், பரங்குன்றுறை செவ்வேள் விழவினையும் காணவநதாருள், ஒருத்தி, தனக்குரிய அணிகளைப், பரத்தையர் ஒழுக்கம் உடையனாய தன் தலைவனால் அளிக்கப்பெற்று அணிந்து வந்தாளொரு பரத்தையைப் பார்த்து, அவ்வணிகள் அவள்பால் வந்தவாறு யாங்கனம்? அவற்றை அளித்தான் யாவன்? எனக் கேட்கவும், அதற்கு அவள் விடை கூறவும் இருவரிடையே எழுந்த அழகிய சொல்லாடல்களையும், பரத்தையர் ஒழுக்கம் உடையயை தலைவன், ஒரு பரத்தை பால் சென்றமையால், காலம்கடந்து வந்தான் எனக் கழன்று கடிந்துரைக்கும் ஒரு பரத்தையும், அவனும் மேற்கொள்ளும் சொல்லாடல்களையும், சொற்சுவையும் பொருட்சுவையும் பொருந்தப் பாடிக் காட்டுகிறார் புலவர், அவற்றை, அதிற்கண்டு அகமிக மகிழ்க.

ஆசிரியர் எனப்படுவார், அறிவுரைக்கும் சான்றேராவர்; அறம் உணர்த்தவல்லோரே ஆன்றேர் எனப்படுவர்; புலவர் நல்லந்துவனார், ஆசிரியர் என அழைக்கப்படுதற்கேற்ற அறிவும், அறமும் கிறைந்த உள்ளத்தினராவர்; அவர் உள்ளத்தில் ஊறிய அறிவுரைகள் பல ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன ; அவற்றையெல்லாம் தொகுத்து உரைப்பின், அதுவே ஒரு பெருநூலாம். ஆதலின், அவற்றுள் சிலவற்றை ஈண்டு நோக்குவோமாக.

“பிறர் நோயும், தம் நோய்போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன்” (நெய்தற்கலி : உஉ ஒருவர்க்கு உற்ற துயரைத் தம்மால் தீர்த்தல் இயலாதாயின், வருந்துவாரைக் கண்டு தாமும் வ்ருந்துவர் சான்றேர் ; சான்றேர், தம்மை அடைந்தார் தீயவராயினும் காத்தலைக் கடமையாகக்கொள்வர். “திங்கள் அரவுறின்