பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அதியன் விண்ணத்தனார்


தீர்க்கலாராயினும் தம் காதல் காட்டுவர் சான்றோர்;" "தாங்காச் சினத்தோடு காட்டி உயிர்செகுக்கும் பாம்பும் அவைப்படில் உய்யும்" (நெய். கலி : உ௩ ) எனக் கூறும் சான்றோர் இயல்புகளும்,

தனக்கு அறிவுபல ஊட்டி வளர்த்த ஆசிரியனுக்கு உறுபொருள் கொடுத்தல் வேண்டும் ; உற்றுழி உதவல் வேண்டும் ; அவ்வாறு ஆசிரியர்க்குதவாதவன் அறிந்த கலைச்செல்வமும், பெற்ற பொருட்செல்வமும் சிறுகச் சிறுகச் சீரழிந்துபோம். தனக்கொரு துயர் வந்தக்கால் அது துடைத்துத் துணை புரிந்தார்க்கு ஒரு துயர்வரின் அதை ஒழித்து உறு துணைபுரிதல் வேண்டும்; அவ்வாறு உதவாது செய்ந்நன்றி கொன்றான், இம்மையிலேயேயன்றி மறுமையிலும் இன்னல் பல உற்று இழிநிலை பெறுவன. தம்மைச் சூழ வாழும் சுற்றத்தார் வருந்திய வாழ்க்கையினராகப், பெரும்பொருள் பெற்றான் ஒருவன், அவரையும் பேணாது, அப்பொருளையும் போற்றாது வாழின், அவன் குடி குன்றும் எனக் கூறும் பொருளின் இயல்புகளும்,

"கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்;
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்றவன்
எச்சத்து ளாயினும் அர்து எறியாது விடாதேகாண்.
கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால்."

(நெய்தற்கலி : ௩உ)

'அன்பும், அறம்பிறழா வாய்மையும், நெறிபிறழா நீதியும் இவனோடு பிறந்தன ; இன்று இவனோடு மாய்ந்தன; இனி அவற்றை எவன்பால் காண்போம்,' என்று மக்கள் மனங்கலங்குமாறு, தன் நாட்டில் பொய்கெடுத்துப் புகழ் தோன்ற ஆளும் அரசே நல்லாசாம். அவ்வரசு வாழச்செல்வமும் வாழும் ; அவ்வரசு அழியச் செல்வமும் அழியும் எனவும்,