பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்லந்துவனார்

41

“நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனிற் றோன்றிய இவைஎன இரங்கப்
புரைதவ நாடிப் பொய்தபுத்து இனிதாண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல்லூழிச் செல்வம்,”

                                                              (நெய்தற்கலி : ௧௩)

“தன் உயிர் போலத் தழீ இ உலகத்து மன் உயிர் காக்கும் இம் மன்னன்” (நெய்தற்கலி : ௨௪) எனவும், ‘ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று’ என்பவாகலின், பகைவரைப் பகைவர் பணிந்து வாழும் வாழ்க்கை பழியுடைத் தாம். “வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு” (பரிபாடல், ௨௦ : ௭௧) எனவும் கூறும் அரசியல் நெறிகளும்,

தாம் செய்வது தவறு என்பதைத் தம் நெஞ்சார அறிந்தவர், தாம் தவறு செய்வதைப் பிறர் எவரும் அறிந்திலர் என்ற எண்ணமுடையராய்ச் செய்தல் பெரிதும் தவறாம்; தாம் செய்வது தவறு என்பதை அவர் உள்ளம் உணர்ந்துளது ; உணர்ந்த அவ்வுள்ளம் அதைப் பலர் அறியத் தூற்றச் செய்யாதெனினும், செய்தார் நெஞ்சை அணுஅணுவாகச் சிதைத்துக்கொண்டே இருக்கும். ஆதலின் அது செய்யாது வாழ்வாரே அறிவுடையராவர் இக்கருத்தினை விளக்கும் அறநெறியுரைகளும்,

“கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்

நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை.” (நெய்தற்கலி:௮)

“எண் என்ப, ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும்; “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” “மூகத்து இரண்டு புண் உடையர் கல்லா தவர்” என்றும் கூறுப ஆகலின், கல்லாதான் ஒருவனைக் கூறுங்கால், “கல்லாது முதிர்ந்தவன் கண்ணிலா நெஞ்சம்” எனக்கூறும் கல்வியது சிறப்புரைகளும், நெய்தற்கலி பதினாறாவது பாடலில் தொகுத்துக்