பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருலவிய நாட்டு ஆலம்பேரிசாத்தனார்

51


கடலன், ஒளிவீசும் வேற்படையாலும், மதம் மிக்க களிறுகளை உடைமையாலும் சிறந்த பகைவர் படையினைக் கண்டு அஞ்சாது, அக்களிறுகள் அழியப் புகுந்துகொன்று வெற்றிபெறும் பேராண்மையாலும், பெருங்கொடையாலும் சிறந்தவன்; அவனுக்குரிய விளங்கில் மகளிரின் மையுண்ட கண்களேபோல் மாண்புமிறை அழகுடையது என்று கூறுகிறார்.

"கறுத்தோர், ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்னஎம்
மையெழில் உண்கண்." (அகம் : அக)

பிட்டங்கொற்றன், அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சுதல்போன்ற போர்ப்பழிகள் தன்பால் உண்டாகாவண்ணம் போராற்றும் போர்ண்மையாளன்; சேரர் படைத்தலைவன்; பரிசில் பெற்று வாழும் வாழ்க்கையுடையார்க்கு, நல்லபல பொருள்களை நாடோறும் நல்கும் நயமுடையவன்; வெற்றியன்றித் தோல்விகாணா வாட் போர் வல்லவன்; களம் பல வென்று கட்டிய கழல் உடையவன்; அவனுக்கு உரியது குதிரைமலை; மழை தவழும் மாண்புடையது அம்மலை. இவ்வாறு பாராட்டுகிறார் பிட்டங்கொற்றனை.

"வசையில் வெம்போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்

மைதவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்."
(அகம் : க௪௩)

"இவள் தந்த காமநோய் தணிக்கலாகாமையின் யான் ஊர இம்படலைத் தந்தது; இவ்வூரார் எடுத்த அலர், ஆவிரை, பூனை, உழிஞை முதலாம் மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம்பூ மாலையைத் தந்தது; ஞாயிறு ஒளியடங்கி மறைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; இவற்றிற்கெல்லாம் மேலாக, மெல்லென வீசும் வாடையினையும், பனித்துளியையும், அன்றில் தன் துணையினை அழைக்கும்