பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அதியன் விண்ணத்தனார்


இனிய குரல் ஒலியினையும் உடைய இவ்விரவு, யான் ஒன்றும் செயலாற்றாவாறு செய்யும் கையறவினைத் தந்தது; இத்தனை துன்பங்களாலும் சூழப்பெற்ற யான் எவ்வாறு உய்வேன்? எங்ஙனம் வாழ்வேன்?" எனத் தான் காதலித்த ஒருத்தியின் காதலைப் பெறமாட்டாது வருந்துவான் ஒருவனின் வருத்த நிலையினை வகுத்துக் காட்டும் வகை வனப்பு மிக உடையது.

"மடலே, காமம் தந்தது ; அலரே
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே;
இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படரப்
புலம்பு தந்தன்றே புகன்றுசெய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன் தலையும், பையென
வடந்தை துவலை தூவக், குடம்பைப்
பெடைபுணர் அன்றில் இயங்கு குரல் அளைஇக்
கங்குலும் கையறவு தந்தன்று;

யாங்கா குவன்கொல் அளியென் யானே." (நற்: ச௫உ)

"துன்பத்தில் உழல்வார், தம்பால் அன்புடையாரும்

தம்போல் துயர் உற்றுத் தம் துன்பத்தில் பங்கு கொள்வதை விரும்புவர்; அவ்வாறு அவர் துன்புறுவதால், தம் துயர் குறைந்தாற்போலவும் கொள்வர்; தாம் துயர் உறுங்கால், அவர் துயர் உறாது, மாமுக மகிழ்ந்து உறுவாராயின், தம் துயர் மிகுவது போலவும் எண்ணுவர்; இது மக்கள் மன இயல்பு; இதைத் தலைமகனைப் பிரிந்து தனித்துறையும் தலைமகள் ஒருத்தி, தன் துணையை அழைக்கும் அன்றில் குரல் கேட்டு வருந்தி, தன் தோழிபால் சென்று, தோழி! நாம் வாராமையால் வருந்தி, அன்றில் குரல் கேட்டுத் துன்புற்று இரவெல்லாம் உறங்காது உறுதுயர் உறுவாள் நம் மனைவி; அவள் துயர்க்குக் காரணம் நானேயென்றே என்று கூறி வருந்தும் வருத்தம் நம் தலைவர் பல உண்பாமோ?' எனக் கேட்டு நின்றாள் எனப் பாடிப் புலப்படுத்தியுள்ளார் புலவர்.