பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கண்ணிக் கெளசிகனார்

61

வீரன் ஒருவன் ஆண்மைக்குப் புதுப்பொருள் காணுகிறார் புலவர். செயற்கரிய செய்வார் பெரியர் என்பர் வள்ளுவப் பெருந்தகையார் ; களம்புகுந்து, கையிற். கொண்ட படை ஒடியுமாறு பகைவரை அழித்து வெற்றி கொள்வது களம்புகுந்த வீரர் அனைவர்க்கும் இயலும் காரியமாம்; இவ்வாறு எல்லோர்க்கும் இயன்ற ஒரு செயலையே தானும் கொண்டிருத்தல் ஓர் ஒப்பற்ற விரனுக்கு அழகாகாது ; அதனால், அவனுக்கு உயர்வு உண்டாகி விடாது; உண்மையில் அவனொரு பெருவிரனாயின், அவன் களம் புகுந்து படையெடுத்தல் கூடாது; அவன் பாசறைக் கண் உளன் என்பதறிந்தே அவன் பகைவர் பணிவதோ அன்றிப் புறங்காட்டி ஒடுவதோ செய்தல்வேண்டும்; பாம்பைக் காணாது, அஃது உறையும் புற்றைக்கண்டே அஞ்சுவதைப் போல், அவர்கள், அவனைக் காணுதே. அவன் பாசறையுள் உளன் என்பதறிந்தே அஞ்சுதல் வேண்டும்; அதுவே, அவ்வீரனுக்கு உண்மை விரமும், புகழுமாம். இந்த உயரிய கருத்தினைத் தன் தலைவனேப் புகழும், ஒரு படைமறவன் வாயில் வைத்துக்கூறி, ஆண்மைக்கோர் அரும்பொருள் கண்ட புலவர்க்குப் பெருவிரர் பெரிதும் கடப்பாடு உடையராகுக.

“இரும்பு முகம்சிதைய நூறி, ஒன்னார்
அருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன் என வெரூஉம் ஒர் ஒளி

வலனுயர் நெடுவேல் என்னை கண் ணதுவே.”

(புறம் : ஙு0க)


தலைமகன் பொருள் கருதிப் பிரிந்து செல்லும் வழியின் கொடுமையினைக் கூறவந்த புலவர், ஆறலை கள்வரால் அழிந்தோர் உடலை அழித்துத் தின்ற ஆண் பருந்துகளின் பெருங்கூட்டம், அப்பிணங்களில் படிந்து உண்டமையால் அவற்றின் உதிரத்தால் செங்நிறம்பெற்று, வானவெளியில் பறந்து, செவ்வானம்போல் தோன்றி அழகு செய்யும்;