பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளநாகனார்

69

தலையே வேண்டுகின்றேன் எனக் கூறும் மனைவியையும், ஆள் வினைக்கு அகறல் ஆடவர் கடன் என அறிந்த அறிவுடையனாய் அவன், தன் பிரிவால் வருந்தி வாடிக் கவினிழக்கும் தன் மனைவியின் துயர்நிலை கண்டு, "அந்தோ! யான் பிரியின், நேற்றுவரை அவள் பால் இருந்து அணி செய்த அவள் மாமைக்கவின், இன்றோடு அழிந்ததுகொல்!" எனக்கூறி அழும் கணவனையும், நம்முன் காட்டி நல்லறிவூட்டும் அவர் பாக்களைப் படித்துப் பயன்பெறுவோமாக.

"நன்னுதல் பசப்பினும், பெருந்தோள் நெகிழினும்
வாரற்க தில்ல தோழி!
(நற் : க௫க)

குன்ற காடன் இரவி னானே,"


"ஆள்வினைக்கு அகறி யாயின், இன்றொடு
போயின்று கொல்லோ தானோ ! படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய

ஆய்கிறம் புரையும் இவள் மாமைக் கவினே.”

(நற் : உ௦௫)


ஊர்க்குருவியின் உடைந்த முட்டை போன்றது. புன்னையின் மலர்ந்த அரும்பு, என்ற உவமையும், காக்கைகள் பல கூடி மாலைக்காலத்தே கடல்நீரில் படிந்தாடும் என்ற இயற்கை அறிவும், வானத்தே விளங்கும், வடமுனையைச் சுற்றி வரும் ஏழு மீன்களும் மக்களால் வணங்கத் தகும் மாண்புடையன எனக் கூறும் கடவுட் கொள்கையும் புலவர் தம் உள்ளமும், உணர்வும் உணரத் துணை புரிவனவாம் :

'உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை."

"மையற விளங்கிய மணிநிற விசும்பில்
கைதொழு மரபின் எழுமீன் போலப்
பெருங்கடல் பரப்பின் இரும்புறம் தோயச்
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை."

(நற்:௨௩௧)