பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அதியன் விண்ணத்தனார்

மதுரைச் சங்க மண்டபத்தே அமர்ந்து, நக்கீரர் முதலாம் புலவர்கள் நாற்பத்தெண்மரும், தமிழ் அறிந்து வருவாராயினர். மதுரையில், வங்கிய சூடாமணி எனும் பாண்டியன் அரசோச்சி வரலாயினன்; இளவேனிற் காலம் வந்துற்றது; பாண்டியன், தன் மனைவியோடும் மலர்வனம் புகுந்து ஆண்டுள்ள தொரு செய்குன்றின் மேல் இருந்து இயற்கையின் எழில் கண்டு மகிழ்ந்திருந்தான்; அக்காலை, தென்றல் பண்டுபோல் கமழாது புதுமணம் கமழ்தலை உணர்ந்தான்; என்றும் இல்லா இம்மணம், தென்றற்கு இன்று எவ்வாறு கிடைத்தது; இம்மணம் தரும் பொருள் யாது? என்று எண்ணி எண்ணிப் பார்ப்பானாயினன்; உற்று நோக்கி வருவான், அதே நறுமணம் தன் மனைவியின் கூந்தலினின்றும் வருவதை உணர்ந்தான். அறிதோறறியாமை காண்டலேபோல், தன் மனைவியின் கருநெறிக் கூந்தலினின்றும் கமழ்கிறது எனின், இம்மணம், இவள் கூந்தற்கு இயல்பாயமைந்ததோ, அன்றி, மலரும் மணமுடைப் பொருளும் பெற்றுச் செயற்கையானமைந்ததோ என ஐயறலாயினன்; ஐயத்தைத் தன் அறிவால் தெளித்து கொள்ளமாட்டா வங்கிய சூடாமணி, “என் உளத்துளதாய இவ் ஐயத்தை அறிந்து பாட வல்லார் பெறுக இவ் ஆயிரம் பொன்” என அறிவித்துப் பொன்முடி ஒன்றைச் சங்க மணிமண்டபத்தே தூக்கினான்; புலவர்கள் அரசன் ஜயம் யாதாம் என எண்ணி எண்ணிப் பார்த்தும், அஃது அறியமாட்டாராயினர்.

இஃது இவ்வாறாக, ஆதிசைவ மரபில் தோன்றி, இளம் பருவத்திலேயே இருமுதுகுரவரையும் இழந்து, பிரமசரியம் மேற்கொண்ட தருமி என்னும் அந்தணச் சிறுவன் ஒருவன், ஆலவாய்ப் பெருமான் அடிமுன் வீழ்ந்து, “எந்தையே! அடியேன், தந்தைதாய் அற்றவன்; எவர் துணையும் இன்றி இன்றுவரை துயர்வாழ்வுடையேன்; அதனால், மணம் செய்து கொள்ளும் மனம் உடையேன்; நல்லாள் ஒருத்தியொடு இல்லறம் மேற்கொள்ளா எனக்கு நின் மலரடி அருச்சிக்கும் மாண்பு வாரா தன்றோ? எல்லாம்