பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அதியன் விண்ணத்தனர்


காட்டித் துரத்த வறிதே திரும்பும் எனவும், யானையின் கன்னத்தே வடியும் மதநீரைச் சூழ்ந்து திரியும் வண்டுகளின் பறக்கும் ஒலியினை, யாழ் ஓசையோ என மயங்கிக் காது கொடுத்துக் கேட்கும் அசுணப் பறவை எனவும், பகை வரால் ஊர் பாழாயினமையால், அவ்வூரினின்றும். குடி பெயர்ந்துபோன மக்களோடு, அவ்வூர்ப் பொதியிலில் நின்ற கம்பத்துறை கடவுளும் குடிபெயர்ந்து போய்விடவும், பழகிய பழமையால், அக்கம்பத்தை விட்டுப் பிரியாது உறையும் புறாக்கள்' எனவும் புலவர் கூறுவன. புலவர் உயிர்களின் இயல்பினை நுனித்துணரும் அறிவின் ஒட்பத்தை உணர்த்துவனவாதல் காண்க.

“மூதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
படுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடுங்கைக் கானவன் கழுது மிசைக் கொளி இய
நெடுஞ்சுடர் விளக்கம்.”

“யானைக் கவுள் மலிட இழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விடர அசுணம் ஓர்க்கும்.” (அகம் :௮௮)

“கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பு.” (அகம் :௩௦௭)

தன் மகள், தலைவன் ஒருவனைக் காதலித்து அவனைப் பெறமாட்டாமையால் வருந்துகிறாள் என்பதை அறிய மாட்டாது, அவள் நோய்க்குக் காரணம் யாதுஎன அறிய வேலனை அழைத்தாள்; அவன் இது அணங்கினால் வந்தது; வெறியாட்டெடுப்பின் தீரும் என்றான்; அவளும் அதற்காவன மேற்கொண்டாள்; இஃதறிந்தாள் அவள் மகள்; அவளுக்கு ஓர் அச்சம் உண்டாயிற்று; அன்னையின் முயற்சி இது. இந்நிலையில் தலைவன் வந்து அன்புகாட்டிச்