பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரெயில் முறுவலார் بعة பேரெயில், ஒர் ஊர்; முறுவல், புன்னகை; இவர் பேரெயிலிற் பிறந்து, புன்னகை தவழும் இன்முகம் கொண்டு வாழ்ந்தமையால், இவர் பேரெயில் முறுவலார் என அழைக்கப்பெற்ருர், பேரெயில் என்ற பெயருடைய ஊர்கள். தமிழ்நாட்டில் பல உளவாம். கானப்பேரெயில் என்ருேர் ஊர் இருப்பதையும் உணர்க. பாண்டிநாட்டில் வெண்புலகாட்டில் ஒரு பேரெயில் உளது. முறுவலார், கம்பி நெடுஞ்செழியன் என்ற பாண்டிநாட்டான் ஒருவனேப் பாராட்டியிருத்தலால், இவர் பாண்டிநாட்டுப் பேரெயி லேச் சேர்ந்தவராவர் என்று கூறுவர் சிலர். இவர் பாராட்டிய படைத்தலேவன் பெயர், கம்பி நெடுமொழியன் எனவும் ஏடுகளில் காணப்படுவதைக் கொண்டு, தென்ஞர்க் காடு மாவட்டத்தில் உள்ள நெடுமொழியன் என்ற ஊர்ப் பெயருடையானேப் பாராட்டியுள்ளமையால், முறுவலார் சோழநாட்டில் காவிரியின் தென்கரைக்கண் உள் ள தேவாரம் பெற்ற பேரெயிலில் பிறந்தவராவர் என்று கூறுவர் வேறு சிலர். பேரெயில் முறுவலார் என்ற பெயர் ஊராலும், உறுப்பாலும் வந்ததன்று முப்புரங்க ளாகிய பேரெயில்களைத் தமது முறுவலால் எரித்துப் பேரெயில் முறுவலார் என்று பெயர் பூண்ட சிவபெருமான் பெயரையே தமக்கும் பூண்டவர் இவர் என்று கூறுவாரும் உளர். - . பேரெயில் முறுவலார் பாராட்டிய நம்பி நெடுஞ்செழி யன் ஒரு குறுநிலத் தலைவனுவன்; முடியுடை மூவேந் தர்க்கு அறிவானும், ஆற்றலானும் துணைபுரிந்தார், அம் மூவேந்தர் பெயர்களேயே தாமும் கொண்டு சிறப்படை தலும் உண்டு: அவ்வாறு பாண்டியருள் சிறந்தாளுகிய நெடுஞ்செழியனுக்குத் துணைபுரிந்து சிறப்புற்றமையால், இத்தலைவனும் நெடுஞ்செழியன் எனப் பெயர்பெற்ருன். ஆடவருட் சிறந்தாரை நம்பி என்றலும், பெண்டிருட்