பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. பெருந்தோட் குறுஞ்சாத்தன் ஐயனர்க்குரிய பெயராகிய சாத்தன் என்ற தெய்வப் பெயரைத் தம் இயற்பெயராகக்கொண்ட இப்புலவர், பெரிய தோளேயும், குறுகிய வடிவினேயும் பெற்றிருந்தமை யால், அக்கால மக்களால் பெருந்தோம் குறுஞ்சாத்தன் என அழைக்கப்பெற்ருர். - - - இவர் குறிஞ்சிகில வளங்களைக் கண்டு, கண்டாங்கே வரைந்து காட்டியுள்ளார். மிக உயர்ந்த மரங்களைக் கொண்ட ஒரு பெரிய வாழைத்தோட்டத்தினுள் ஆண் யானே ஒன்றும், பெண் யானே ஒன்றும் நுழைந்து செல்ல லாயின. வாழை மரத்தின் சுருண்டு தோன்றிய குருத்து ஒன்று, ஆண் யானேயின் மத்தகத்தின்மீது அசைந்து வீழ்ந்து அதைத் தடவிக்கொடுத்துவிட்டது. வாழையால் யானேயின் வலிகெடும் ஆதலின், வாழை தொடப்பெற்ற ஆண் யானே தன் ஆற்றல் குன்றி அறிவிழந்துபோய்விட் டது. ஆண்யானேக்குண்டான துயர்கண்ட பெண் யானே பெருமூச்செறிந்து வருந்தி, அதைப் பையப்பைய, அருவிர்ே வீழ்ந்தோடும் மலேச்சாரற்கண் அழைத்துச்சென்று, படுக்க வைத்து, அதன் முதுகைத் தன் கையால் மெல்லத் தடவிக் கொடுத்தது. பெண் யானேயின் இவ் அன்பாலும் அருவிர்ே ஒலியாலும் ஒருவாறு துயர்நீங்கிய ஆண் யானே சிறிது துயில்கொள்ளத் தொடங்கிற்று. யானேகளின் இத்தகைய அன்பு வாழ்க்கையினே விளங்கக்காட்டும், புலவர் அறிவின் அழகினே அறிந்து மகிழ்வோமாக ! "சோலை வாழைச் சுரி நுகும்பு இணைய, அணங்குடை அருங்தலை வேலின், மதன் அழிந்து மயங்கு துயர் உற்ற மையல் வேழம், - உயங்கு உயிர் மடப்பிடி, உலேபுறம் தைவர. ஆம்இழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்." - راودهمة : 3 طاق) . 皋一町 சி. பெ.-7 -