பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் வெல்லாம் செய்து நிறைந்த வாழ்வினன் ஆனவன் என்ற எண்ணம் அத்துயரைச் சிறிது குறைத்தது; அங்கிலேயில், 'நம்பி நெடுஞ்செழியன் வாழ்வாங்கு வாழ்ந்தவனுவன்; அவன் உடலை வாள்கொண்டு வெட்டிப் புதைப்பதால் புகழோ, அவ்வாறின்றிச் சுடுவதால் பழியோ அவனுக்கு இல்லை; அவன் புகழால் கிறைந்துவிட்டான் ஆதலின், வேண்டியவாறு செய்வீர்களாக," என் று கூறித் தம் ஆம்ருமையினேக் காட்டிர்ை. நம்பி நெடுஞ்செழியனேப் பாராட்டுவார்போல், காட்டில் கல்லவராய் வாழ விரும்புவோர்க்கு வழிகாட்டிய புலவர்க்கு நன்றிசெலுத்துவோமாக! 'தொடியுடைய தோள் மணந்தனன் : கடிகாவின் பூச்சூடினன்; தண்கமழும் சாங்து விேனன் ; செற்ருேரை வழிதபுத்தனன் ; கட்டோரை உயர்பு கூறினன்; வலியர்என் வழிமொழியலன் ; மெலியர் என மீக்கூறலன் ; பிறரைத்தான் இரப்பறியலன் ; இரங்தோர்க்கு மறுப்பறியலன் ; வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர்தாங்கினன்: பெயர்படை புறங்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன் ; நெடுங் தெருவில் தேர்வழங்கினன்; ஓங்குஇயல களிறு ஊர்ந்தனன் : தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன் ; மயக்குடைய மொழி விடுத்தனன் ; ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன்; ஆகவின் இடுக ஒன்ருே: சுடுக. ஒன்ருே; . . . " படுவழிப் படுக இப் புகழ் வெய்யோன் தலையே." - - (புறம் : உங்க).