பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரெயில் முறுவலார் 101 தாம் விரும்பிய காதலரைப் பெறமாட்டாமல் காம கோய்மிக்க காலத்தில், மக்கள் தங்களுக்கு இயல்பான அறிவையும் ஒழுக்கத்தையும் இழந்து, சீலமல்லன செய்ய -வும் துணிவர் என்ற உண்மையினைத் தான் காதலித்த பெண் ஒருத்தியைப் பெறமாட்டாமையால், மடல்.ஊர்த லும், வரைபாய்தலும் ஆய பழிதரும் செயல்களே மேற் கொண்ட தலைவன்வழியாக உலகிற்கு உணர்த்தியுள்ளார். உணர்த்திய அப்பாட்டில், மடலூர் வகையினேயும் விளக்கி :யுள்ளார். “torgrør மடலும் ஊர்ப; பூஎனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் குடுப; மறுகின் ஆர்க்கவும் படுப; - பிறிதும் ஆகுப; காமம்காழ்க் கொளினே.” (குறுங் கள்) புலவர் பேரெயில் முறுவலார், தாம் சொல்லக்கருதும் செய்திகளைச் சிறு சிறு சொற்ருெடர்களால் விளக்கும் திறம் வியக்கத்தக்கதாம்.