பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு விழிக்கண் பேதைப் பெருங்கண்ணனும் கண்ணணுர், பெருங்கண்ணனர் என்ற பெயருடைய புலவர்கள் சங்ககாலத்தே பலர் இருந்தன்ர்; மகளிர் கண் களுக்கு உவமை கூறும் சிறப்பு வாய்ந்த கண்களே உடைய மான் குட்டியை, விழிக்கட் பேதை என்று பெயரிட்டு அழைத்த சிறப்பால், பெருங்கண்ணனர் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணணுர் என்று பெயர் பெறுவாராயினர். பிடவமும், தளவமும் கொன்றையும், காயாவும் தளிர்த்து, மலர்ந்து மணங் கமழுமாறு மழை பெய்துவிட்ட கார்காலத்தே, மான் பிணேயானது மருண்டு விழிக்கும் தன் குட்டியோடு, மான் கூட்டத்தினின்றும் பிரிந்து ஒடு வதைக் கண்ட கலேமான், அப் பிணேயிடத்தே கொண்ட விருப்பால் அவற்றின் பின்னே தேடிச்செல்லும் அழகிய காட்சியைத் தலைமகன் முன்னே காட்டி, அவன் காதலியை -யும், அவளே விடாது. உடனுறையும் அவள் புதல்வனேயும் விரும்பி, விரைந்து விடு செல்லுமாறு செய்துள்ளார் புல வர். மானின் அன்பு வாழ்க்கையினேக் கண்ட தலைமகள், தேரை விரைந்து செலுத்துமாறு பாகனே வேண்டிக்கொள் வதைக் காணுங்கள் : - கார்தொடங்கின்றே கால;வல் விரைந்து செல்க, பாக! நின் தேரே; உவக்கான் கழிப்பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரின்து ஒடக் காமர் நெஞ்சமொடு அகலாத் . . . தேடுஉ மின்ற இரல் எறே. (கம் : உசஉ)