பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பிடர்த்தலேயார் 7 என்று வழியின் கொடுமையை எடுத்துக் காட்டி, தம் வறுமையின் கொடுமையால், வழியின் கொடுமை பாராது வருவர் இரவலர் என இரவலர் தம் வறுமையினே விளங்கக் காட்டி, அவர்கள் அவ்வாறு வருதல், அவர் தம் உள்ள விருப்பத்தை அவர் உரைக்காமலே உணர்ந்து கொடுக்கும் கின் கொடை நோக்கியே, "கின்னசை வேட்கையின் இரவலர் வருவர்.அது முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தல் வன்மை யானே' (புறம் : க.) என்று அவன் கொடைச் சிறப்பினேயும் உணர்த்தியமுறை, இரும்பிடர்த்தலையார், ஒர் உயர் தமிழ்ப் புலவராவர் என் பதை உறுதி செய்வதாம். 'பெருங்கை யானே இரும்பிடர்த் தலைஇருந்து மருங்தில் கூற்றத்து அருந்தொழில் சாவாக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ! கிலம் பெயரினும் கின்சொல் பெயரல்' என்ற அடிகளில், பாடிய தம் பெயரும், பாடப்பெற்ற பாண் டியன் பெயரும் அமையப் பாடி, வரலாறு உணரும் விருப் பம் உடையார்க்குப் பெருந்துணை புரிந்துள்ளமை உணர்க.