பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தாமான் தோன்றிக் கோன், செல்லூர்க்கேர்மான் ஆதன் எழினி ஆகியோரைப் பாராட்டியுள்ளார். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆற்றல் மிக்க அரசனவன்; வடபுல மன்னரை வெற்றி கொண்ட வீறுடையவன். இவனேப் பாடிய புலவர் இரு வரும், இவன் போர்வன்மையினேயே எடுத்துக் கூறிப் போற்றியுள்ளனர்; புலவர் ஐயூர் முடவளுர், 'தமிழகம், அரசர்க் கெல்லாம் பொதுவாகும்; அதை உரிமை கொண்டாடல் அரசர் அனேவருக்கும் பொருந்தும் என்ற சொல் கேட்கவும் பொருதவன்; அவன் தமிழகம் அனைத் தினேயும் தன் ஒரு குடைக்கீழ் வைத்துத் தான் ஒருவ கைவே ஆளுதல்வேண்டும் என்ற பேராசையும், அப் பேராசையினேக் குறைவற நிறைவேற்றுதற்காம் பேராற்ற லும் உடையவன்; அவன் எண்ணம் அறிந்து, திறை யிடுக' என அவன் கேட்பதற்குமுன்னரே கொண்டுபோய்க் கொடுக்கும் அரசர்களே உயிர்பெற்றுப் பிழைப்பர் ; கொடாதார் நிலை, அந்தோ! மிக மிக இரங்கத் தக்கதாம். அவன் ஆனேக்கு அடங்காது ஒருநாள் வாழ்தலும் இய லாது ; காலமெல்லாம் அரிதின் முயன்று தேடிப் பெற்ற பேரரசை, அவனுக்கு அடங்காமையால், ஒரு நாள் அள வும் ஆண்டு மகிழாமல், இழந்து அழிவர்; அத்துணே ஆற்றல் உடையான்" எனப் பாராட்டுகின்றர். வழுதி சினந்தால் வாழார் எவரும்; அவன் வெகு வியை வென்று அடக்கல் எவர்க்கும் இயலாது என்பதை விளக்க வந்த ஆசிரியர் 'கடல்நீர் பொங்கி எழுமாயின், அதைத் தடுத்து கிறுத்தவல்ல அணயினே எங்கும் காணல் இயலாது; அளவின்றிப் பெருகி எழுந்து கொழுந்து விட்டு எரியும் தியால் அழிவுருமல் உயிர்களேக் காத்துப் பேணவல்ல இடம் உலகத்தில் எங்கும் இல்ல்ை; பெருல்ே களேயும் பெயர்க்கும் ஆற்றல்கொண்டு சுழன்றடிக்கும் காற்றினத் தடுத்து கிறுத்தவல்ல ஆற்றல், உலகில் எதற் கும் இராது; அதைப்போன்றே வழுதி சினந்தால், அச்