பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயூர் முடவனர் - . 23 புலவர் ஐயூர் முடவளுர், தாம் பாடிய அகத்துறைப் பாடல்கள் பலவற்றுள், ஒரு பாட்டில், கரிய விரலும், சிவந்த முகமும் கொண்ட குரங்குக்கூட்டம் ஒன்றையும், அக் கூட்டத்தைத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லும் ஒரு பெண் குரங்கையும், பெரிய மலேயினின்றும் வீழ்ந்து ஒடி வரும் அருவி நீரில் ஆடியும், அவ்வருவி அருகே வளர்க் துள்ள நீண்ட பெரிய மூங்கிலில் ஏறி, அதன் நுனியில் அமர்ந்து ஊசலாடியும், அடுத்துள்ள மலேமீது ஏறி, வேங்கைமரத்தின் மலர்கள், அதன் கீழுள்ள சுனேநீரில் உதிர்ந்து படியுமாறு அம்மரக் கிளேகளில் குதித்து ஆடியும் மகிழ்ந்து செல்லும் அக்குரங்குகளின் ஆடல்களையும் எடுத்துக் காட்டும் அழகிய ஓவியமொன்றைக் தீட்டித் தங்துள்ளார்: - -- "கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளே பெருவரை அடுக்கத்து அருவி ஆடி, ஒங்குகழை ஊசல் தூங்கி, வேங்கை வெற்பு:அணி நறுவி கற்சுனே உறைப்பக் கலேயொடு திளேக்கும்.' (நற் :ாடக.ச) மற்குெரு செய்யுளில், தந்தை கள் குடித்த மயக்கத் தால், கடமை மறந்து கவலையற்றுக் கிடந்தாகை, கயிறு தொங்கும் துாண்டிற்கோலுடன் சென்று, புனலருகே அமர்ந்து, வரால்மீனே வலித்துக்கொணர்ந்து, அதை வஞ்சி மரத்து விறகால் சுட்டு, உண்ணும் பதமாக்கி, உறங்கிக் கிடக்கும் தந்தை எழுந்து தானே உண்ணமாட்டாமை, யறிந்து, அவன் வாயிலிட்டு ஊட்டும், பாண்குலப் பெண் ஒருத்தியின் அன்புவாழ்க்கையினே வகுத்துக் காட்டி யுள்ளார் : - " காண்கொள் நுண்கோவின், மீன்கொள் பாண்மகள் கான்புனல் அடைகரைப் படுத்த வராஅல் காரt நறவுண் டிருந்த தந்தைக்கு . . . . . வஞ்சி விறகில் சுட்டு வாயுறுக்கும்.' (அகம் : உச்சு) 'பழகிய பகையும் பிரிவு இன்னுது' என்ப. எவரை யும் பழக்க்த்தால் நம்மவராக்கலாம்; எவரும் பழக்கத்தால்