பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. நெய்தல் தத்தனுர் இவர் தந்தையார் கொடியூரில் பிறந்து, அங்காட்டு அரசரால், 'கிழார்' எனச் சிறப்பிக்கப் பெற்றவராதலின், இவர் கொடியூர் கிழார் மகனுச் செய்தல் தத்தனர் எனவும் அழைக்கப் பெறுவர். -- பெருங் கடுங்கோ, பாலேத் திணையைச் சிறப்பித்துப் :பாடியதைப் போலவும், இளங் கடுங்கோ, மருதத் திணை யைச் சிறப்பித்துப் பாடியதுபோலவும், தத்தனர் என்ற இயற்பெயருடைய நம் புலவர் நெய்தல் திணையைப் பாடி யுள்ளார். நெய்தல் தினேயாவது, தலேவன் பிரிந்தவழித், துயர் தாங்கமாட்டாத் தலைமகள், கழியும் கானலும் கண்டு இளங்குதலாகும். - - - - கடல் திரை கொணர்ந்து கொழித்த, பால்போலும் 'துளய மணல்மேட்டில், பகற்காலத்தே, கூடியிருந்து ஆடி மகிழ்ந்த பரதவர் மகளிரெல்லாம், தம் ஆடல்தொழில் மறந்து, விட்டகத்தே உறங்கிக் கிடப்பதால், கடற்றுறை அழகிழந்து காணப்படுகிறது; தம் வலைகளால் வாரிக் கொணர்ந்த பாவைபோன்ற இரு மீன்களேக், காயவிட்டுப் பறவைகளே ஒட்டி வாழ்ந்தவரும், பகல் கிழிந்துவிட்டமை யால் தம் தொழில் ஒழிந்தமையால், அவ் விடங்களும் அழகிழந்துவிட்டன; பெரிய கொம்புகளே உடைய சுரு. மீன்களைப் பிடித்துவிட்ட மகிழ்ச்சியால், பின்னும் வேட்டை மேல் செல்லும் விருப்பமின்றிப், பரதவர்கள் வீட்டிலேயே. தங்கி விட்டமையால், அவரைக் காணலாகாக் கடற்கரையும் கவினிழந்துவிட்டது என இராக்காலத்துக் கடற்கரைக் காட்சியினைப் புலவர் கன்கு விளக்கிக் கூறியுள்ளார்: 'படுதிரை கொழ் இய பால்கிற எக்கர்த் தொடியோர் மடிக்தெனத் துறைபுலம் பின்றே; முடிவலே முகங்த முடங்கிருப் பாவைப் படுபுள் ஒப்பலின் பகன்மாய்க் தன்றே; கோட்டுமீன் எறிந்த உவகையர், வேட்ட மடிந்து எமரும் அல்கினர்.' (கற்: சக)