பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவு. பாலேக்கோதமனுர் இவர் பெயர் கெளதமர்ை எனவும், பாலக்கெளதம ஞர் எனவும் கோதமர்ை.எனவும் வழங்கப்பெறும். இவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானேச் செல் கெழுகுட்டுவனேப் பதிற்றுப்பத்து மூன்ரும் பத்தால் பாடி, அவல்ை வீடுபேறடைந்தார் என்ப. இதனேப் ' பாடிப் பெற்ற பரிசில்; ர்ே வேண்டியது கொண்மின்' என, யானும் என் பார்ப்பனியும் கவர்க்கம் புகல்வேண்டும் என, பார்ப் பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட் பிக்க, பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பணி யையும் காணுராயினர்' எனக் கூறும் அப்பத்தின் பதிகத் தாலும், 'தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீ ர. அடுத்துத்தா என்றற்கு வாழியரோ” என்ற முன்அறுறை யரையனர் பாடிய பழமொழிச் செய்யுளாலும் (816), "சோன்குட்டுவன் புகழைச் செய்யுளாகத் தொடுத்த கெளதமன் என்னும் பெரிய புலவன், யானும் என் சுற்ற மும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களே முடித்துத் அறக்கத்தைத் தா என்ருற்கு , அவன் சொற்குறை தீர்ப்பான்பொருட்டு உவந்து யாகங்களே நடத்தி, நீ வேண் டிய துறக்கத்தின்கண் நீடுவாழ்வாயக என்றன்; ஆதலால் புனேந்து இப்பெற்றியார் என்று புகழவேண்டுவ்தில்லை; இயற்கையாகக் கொடுக்கும் சீலத்தார் தம் அளவினுற். கொடுக்கவல்லதனத் தாமே அறிந்து கொடுப்பார்” என வரும் அப்பழமொழிச் செய்யுளின் பழைய உரையாலும், 'பாடாண் பகுதி கைக்கிளேப் புறனே' என்ற தொல்காப் பியப் புறத்திணையியல் சூத்திரத்தில் (25) இமயவரம்பன் தம்பி பல்யானேச்செல்கெழு குட்டுவனேப் பாலேக்கெளதம. ர்ை துறக்கம் வேண்டினரென்பது குறிப்பு வகையாற். கொள்ள வைத்தலின், இது வஞ்சிப் பொருள்வந்த பாடா ணுயிற்று" என எழுதும் நச்சினர்க்கினியர் உரையாலும், நான்மறையாளன் செய்யுட்கொண்டு, மேனிலை உலகம் விடுத்தோளுயினும்' எனவரும் சிலப்பதிகார அடிகளாலும்