பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்பாலும் சிறப்பாலும் - - - பெயர்பெற்ருேர் தோற்றுவாய் பெற்றேர்கள், தம் மக்களுக்கு, அவர் குழவிப் பரு வத்தே பெயரிடுகின்றனர்; அவ்வாறு பெயரிடுங்கால் தம் தாய் தந்தையர் பெயரையே தம் மக்களுக்கு இடுவதும், தாம் வழிபடு கடவுளரின் பெயர்களே வைப்பதும், மக்கள் பிறந்த நாள்மீனல் பெயரிடுவதும் ஆகப் பல முறைகளைப் பின்பற்றக் காண்கின்ருேம்; ஆனால், இவ்வாறு பெற்ருேர் . வைத்த பெயரையே, தம் வாழ்நாள்வரையும் வைத்து வாழ்பவர் உலகில் மிகச் சிலராவர்; பெற்றேர் இங்ட பெயர் மறைய, பல்வேறு காரணங்களால் வந்த புதுப் பெயரைக்கொண்டு வாழ மக்கள் விரும்பலாயினர்; பெற். ருேர் இட்ட பெயரைத் தாம் விரும்பாமல், தாம் விரும்பிய பெயரைத் தாமாகவே வைத்துக்கொள்வோரும் உளர்; பெற்ருேர் இட்ட பெயர், இவ் வகையால் மாறுவதினும், அவர் கிறம், வடிவம், தொழில், குணம் ஆய இவை கருதி, அவரோடு வாழ்பவர் வைக்க மாறுவதே பெரும்பான்மைய வாம். இவ் வகையால், பெற்ருேள் இட்ட இயற்பெயர் மறைய, பிற்காலத்தினர் இட்ட காரணப்பெயர்களோடு வாழ்பவரை, இக் காலத்தில்மட்டும் காண்கிருேம் என்றல் பெர்ருக்காது; அத்தகைய பெயர் பெற்றேர் பண்டைக் காலத்திலும் இருந்தனர். பழந் தமிழ்ச்செய்யுள் பாடிய புலவர்களின் பெயர் களுள் பல, இவ்வாறு வந்தனவே தாம் வாழ்ந்த ஊரால்