பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் பெயர் பெற்ருேரும், தாம் மேற்கொண்ட தொழிலால் பெயர் பெற்றேரும், தாம் பாடிய பாவினத்தின் பெயரால் பெயர் பெற்ருேரும், தாம் பாடிய பாக்களுள் தாம் எடுத் தாண்ட உவமைகளால் பெயர் பெற்ருேரும், அப் பாக் களில் அவர் எடுத்தாண்ட அரிய தொடர், சொல் இவற் ருல் பெயர் பெற்றேரும், தம் நிறத்தாலும், தம் வடிவா லும் பெயர் பெற்ருேரும் ஆய பலரையும் காண்கிருேம். இவர்களுள், தம் உடல் உறுப்புக்களின் அமைப்புக் கருதி யும் தாம் பெற்றுள்ள சிறப்புக் கருதியும் பிறர் வைத்த பெயருடைய புலவர்களே, உறுப்பாலும், சிறப்பாலும் பெயர் பெற்ருேர் என வகைப்படுத்தி, அவர்கள் வரலாற் றைக் கூறுவதே இந்நூல். இவர்களுள், ஐயூர் முடவனுர், திப்புத் தோளார். கரி வ்ெரூஉத் தலேயார், நெட்டிமையார், பரூஉமோவாய்ப் பதுமன், பெருந்தலைச் சாத்தனர், பெருந்தோட் குறுஞ் சாத்தன், பேரெயில் முறுவலார் என்ற இவர்கள் எண் மரும் உறுப்பாற் பெயர் பெற்ருேராவர்; அடைநெடுங் கல்வியார், இரும்பிட்ர்த் தலையார், ஊட்டியார், ஊன்பொதி பசுங்குடையார், கழைதின்யானேயார், கோடை பாடிய பெரும்பூதனர், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன், கிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனர், நெடும்பல் லியத்த ர்ை, நெய்தல் தத்தனர், நோய்பாடியார், பாரதம் பாடிய பெருந்தேவனர், பாலேக்கோதமனர், பெருஞ்சித்திரளுர், மடல் பாடிய மாதங்கீரனர், மலேயர்ை, வண்ணப்புறக் கந்தரத்தனர், விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனர் என்ற இவர்கள் பதினெண்மரும் சிறப்பால் பெயர் பெற் ருேராவர். இவ்விருவேறு வகையினர் வரலாறுகளையும் அகரவரிசையிற் கோத்துச் சேர்த்து ஆய்ந்து காட்டியுள் ளோம். :