பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அடைநெடுங் கல்வியார் இவர், ஆசிரியர் ஒருவரை யடுத்து அரிதிம் பெறுதற் குரிய கல்வியை எளிதிற்பெற்று, புகழ்பாவ வாழ்ந்தமை யால் அடைநெடுங் கல்வியார் என அழைக்கப்பெற்றும் என்ப. இவர் பெயர் அண்டர் நடுங்கல்லினர் எனவும் காணப்படும்; பகைவர் கைப்பற்றிய தம் ஆனிரைகளைப் போரிட்டு மீட்டுக் கொணர்ந்த போரில் புண்பட்டு இறந்த விரன் ஒருவனுக்குக் கல் நாட்டி ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லே அண்டர் கடுங்கல் எனப் பாராட்டிய சிறப்பால் இவர் அண்டர் நடுங்கல்லிஞர் என அழைக்கப் பெற்ருர் என்ப; ஆல்ை, இப்போது கிடைக் துள்ள அவர் பாக்களில் அத்தகைய தொடர் எதுவும் காணப்பெறவில்லை. அடைநெடுங் கல்லியார் என்றும், அடைநெடுங் கல்லினர் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் மாறுபட எழுதப்பட்டுளது. அரும் போராற்றி அமரிடை வீழ்ந்த பெரு விார்க்குப் பாணர், யாழிசைத்துப் பாடித் தம் கடன் கழித்த துறை யாகிய பாண் பாட்டைப் பாடிய புலவர் அடைநெடுங் கல்வியார். பகைவர் எறிந்த வேல்கள் பலவும் தன் மார் பில் தைத்து ஊடுருவப்பெற்று வீழ்ந்துகிடக்கும் விரன் ஒருவனுக்கு ஆரக்கால்கள், குழச் செருகப்பட்ட வண்டி யின் குடத்தை உவமை கூறியிருப்பது மிகவும் அழகாக உளது. பாங்கற்கு - ஆர்குழ் குறட்டின் வேல் கிறத்து இயங்க. (புறம்: .அங்). மறவர் குடிவந்த ஆடவர், களம் புகுந்து போராற்று வர் என்ருல், அக் குடிவந்த மகளிர், தங்கள் வீரர்க்காம் தும்பைப்பூத் தரும் செடியினேப் பேணி வளர்ப்பர் என்று கூறி மறக்குடி மாண்பினைப் புலப்படுத்தியுள்ளார்: -