பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலேக்கோதமனர் . 67 - பல்யானேச் செல்கெழு குட்டுவன் வெற்றியும், அவன் காட்டு வளமும் விளங்கப் பாடிய புலவர், அவன் நல்லோர் போற்றும் பண்புடையய்ை வாழவேண்டும் என்ற உயர் பேரெண்ண முடையராயினர். அவ ன் முன்னேர் நாடாண்ட முறையினே நன்கு எடுத்துக்காட்டினர்; அவர் உயர்ந்தோர் போற்றும் உயர்வினரானமைக்கு அவர்பால் அமைந்திருந்த அருங்குணங்கள் இவையென எடுத்துக் காட்டினர். நல்லரசைப் பல்லோர் பழிக்கும் வல்லரசாக ஆக்குதல், அவ் வரசுடையான் கொள்ளும் சினமும், காம மும், கையிகந்த கண்ணுேட்டமும், அச்சமும், பொய்யும, அளவிற்கு மீறிய அன்புடைமையும், கையிகந்த தண்ட மும் ஆம். இந்த உண்மையை முதற்கண் எடுத்துரைத் தார்; தீச் செயலே கின் மனத்தாலும் கினேயற்க! நல்லற முடைய செயல்களே நாடோறும் செய்க நாட்டு மக்கள், ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், பிறர் பொருளைக் கவர விரும்பாமலும் வாழுமாறு, கடலும், கானலும் பயன் பல ஈனுமாறு கல்லாட்சி புரிவாயாக! குற்றமறக் கற்றுத் துறைபோய அறிவினேயுடையாய், அறநெறி நிற்பா யாக! நின்னல் அன்பு செய்யப்பட்ட நின் மனவியரோடு மகிழ்ந்து பிரிவின்றி வாழ்வாயாக உள்ள பொருளே ஊரா ரோடு இருந்து உண்டு மகிழ்வாயாக! என்று இன்ன பல அறவுரைகளே அவன் அகம் கொள்ளுமாறு எடுத்துக் கூறி வாழ்த்தினர்: . "சினனே, காமம், கழிகண் ளுேட்டம், அச்சம், பொய்ச்சொல், அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து அறங்தெரி திகிரிக்கு வழியடை யாகும்; தீது சேண் இகந்து, கன்று மிகப் புரிந்து கடலும், கானமும் பலபயம் உதவப், பிறர் பிறர் கலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் கடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத்துண்டு, மாக்கள். மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்!" (பதிற்று: உஉ)