பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் வறுமையின் வாழ்விடமாய்க் காட்சி அளித்தது. புலவர் பெருஞ்சித்திரனரின் இல்லம் ; வறுமையால் வாடும் தம்தாய், தம்மனேவி, கம்மக்கள், தம்சுற்றம் ஆகியோரின் வறுமைகிலேயினே விளக்கிக்கூறும் புலவர் பாக்கள் படித் கார் உள்ளத்தைப் பாகென உருக்கும் பண்புடையவாம். . வெள்ளே நூலை விரித்தாற்போன்று கரைத்து முதிர்க் தவள் என் தாய்; அவள் தன் கையிற்கொண்ட கோலேயே காலாகக் கொண்டு, அடிமேல் அடிவைத்து நடக்கும் தளர்ச்சியுடையவள் கண்கள் மாசடைந்து பார்வை இழக் தமையால், வீட்டின் முன்புறம் செல்வதும் அவளால் இயலாது; இவ்வாறு உடலும் உள்ளமும் தளர்ந்த அவள், இத்தனே ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தேனே இன்னும் என் உயிர் போகவில்லை!" என்று தன் வாழ்நாளே வெறுத்துரை வழங்கிக் கொண்டே வாழ்கிருள் : என்னேப் பெற்றெடுத்த பெருமைக்குரிய என் தாயின் கிலேஇது. 'வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின், தீர்தல் செல்லாது என் உயிர் எனப் பலபுலந்து, கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி நால்விரித் தன்ன கதுப்பினள், கண்துயின்று முன்றிற் போகா முதிர்வினள் பாய்." (புறம் : கடுக). துன்பத்தால் வருந்தி வாடிய மேனியும், தன் இ8ளய மக்கள் விடாது உண்ணுவதால் உலர்ந்துபோன முலையும் உடையவள் குப்பையில் தானே முளைத்திருக்கும் கிரைத் தண்டுகளில், முன்பு கொய்தவிடத்தே துளிர்த்த புதிய இளம் தளிர்கள்க், கொய்துகொணர்ந்து உப்பிடாமலே கீர் உலையில் இட்டு ஆக்கிப்பெற்ற கீரை உணவன்றி, சோறும் மோரும் உண்டறியாதவள். அழுக்கேறியதும் அளவின்றிக் கிழிந்ததுமான ஆடையினே உடையவள் : தன்னேயும் தன் குடும்பத்தினரையும் வறுமையில் வாட விட்ட தெய்வத்தை இகழ்ந்து வாழ்பவள் அவள் தான் இத்துணே வறுமையுற்ற காலத்தும் என்மாட்டு வற்ருத அன்புடையவள்; அவள் என் இல்லாள் ;