பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அணிலாடு முன்றிலார்

நற்குடிப் பிறந்த மகளிர் இயல்பாகவே எழிலுற்றுத் திகழ்வர்; அவர் காதல்கொண்ட அன்புடைக் கணவர் அவரைவிட்டு அகலாது உடனிருந்து வாழவும் பெறுவ ாாயின், அங்கிலையில் அவர் உள்ளம் இன்பத்தால் உந்தப் பெற்றுத் துள்ளுமாதலின், அவர் இயற்கை அழகு மேலும் சிறப்புற்றுத் தோன்றும். இயல்பாகவே பேரழகுடைய ஒருத்தி காதலித்த கணவனைப் பிரியாது வாழும் பேற் னேப் பெற்றுவிட்டாள்; அதனல் அவள் பேரழகு மேலும் பலமடங்கு மிக்குத் தோன்றுவதாயிற்று; அங் நிலையில் அவளேக் கண்டாள் அவள் தோழி; அவள் பேரழகு கண்டு பாராட்டினுள்; பாராட்டியதோடு அமை யாது, அவள் அத்துணே அழகுற்று விளங்குவதற்காம் காரணத்தை அறியவும் விரும்பினுள்; தலைவி, தோழியின் உள்ளத்தை உணர்ந்தவள்; ஆதலின் அவளை நோக்கி "இயற்கைக்கு மேற்பட்ட என் எழில் கண்டு வியந்து கிற் கும் தோழி! இவ்வெழில் எனக்கு இயல்பானது அன்று; இதைப் பெறுவதும் என்னல் இயலாது; ஆனால் இதை நான் எளிதில் பெறுமாறு எனக்கு அளிக்கவல்லவர் நம் ஆருயிர்த் தலைவராவர்; அவர் என்னே விட்டு அகலாது இருந்து வாழ்வராயின், இல்லாத எழில் பலவும் என்னே வந்து அடைந்து விடுகின்றன; என் எழில்கண்டு வியக்கும் மற்ருேர் உண்மையினேயும் உணர்தல் வேண்டும். இவ் வாறு என் நலம் பெருகத் துணை புரியும் அவரே, இயல்பாக எனக்குள்ள எழிலையும் அழித்து, என்னை அழகிழந்தவ ளாக்கி அழிப்பர். அவர் என்னேவிட்டு அகன்று விடுவா ரானல், அங்கிலையிலேயே அவர் இருந்து அளித்த பேரழகும் போம்; இயல்பாக நான் பெற்றிருந்த அழகும் என்னே விட்டுப் போய்விடும்; அழகிழந்து அலமந்து வாடுவேன் நான்; எனக்கு அழகு அளிப்பதும் அழிப்பதும் அவரே; அவர் இருந்தால் பொலிவு தோன்றி மகிழ்வேன்; அவர் பிரித்தால் அழகிழந்து அழிவேன்” என்று கூறினுள்.