பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5.

யார், கூவன்மைந்தன், செம்புலப் பெயனீரார், தனிமகனுர், தேய்புரிப் பழங்கயிற்றினுர், மீனெறி துண்டிலார், விட்டகுதிரை யார், வில்லகவிரலினுர் முதலிய பதினுல்வராவர்; தாம் பாடிய பாக்களில் அமைத்துள்ள அரிய ஈயம் செறிந்த தொடர்களால் பெயர்பெற்ருேர், ஒரிற்சிபிச்சையார், கங்குல் வெள்ளத்தார், குறியிறைப் புதல்வர், கூகைக் கோழியார், தும்பிசேர்கீரனுர், தொடித்தலை விழுத்தண்டினுர், நெடுவெண் நிலவினுர், பதடிவைகலார் ஆகிய எண்மராவர். இவ்வாறு, உவமையாலும், தொடராலும் பெயர்பெற்ற புலவர்கள் பெயர்பெற்ற முறை ஒர் அளவு ஒற்றுமை உடையதாகக் காணப்படுதலின், அவர்கள் அனைவர் வரலாறும் ஒரே வரிசையின்கீழ் உரைக்கப்பட்டுள்ளன. -

பிற புலவர்களாவது, தம்மைப் பேணிய பேரரசர்களே யும், குறுகிலமன்னர்களையும், கொடை வள்ளல்களையும் தம் பாக்களில் வைத்துப் பாராட்டியுள்ளனர்; அதனல், அவ்வரசர்களின் வரலாற்றினே அறிந்து வருங்கால், அவரோடு தொடர்புடைய அப்புலவர்கள் வரலாற்றின் சில பகுதிகளே அறிய முடிந்தது . ஆனால், ஈண்டுக் கூறிய புலவர்களின் பாக்களில், அத்தகைய குறிப்புக்கள் யாண்டும் காணப்படாமையால், அப்புலவர்களின் வரலாற்றின் சிறு பகுதியினேயும் சம்மால் அறிய இயலவில்லை ; ஆகவே, அவர்கள் வரலாருக, ஈண்டுக் குறிப்பிடுவன எல்லாம், அவர் பாக்களைப் பயின்றார்க்குப் புலப்படும் அவர்களின் உள்ளத்தின் பண்பாடும், அவர்கள் புலமை நலமுமே ஆம்.

அவ்வழி, அவர் பாக்களைப் பயின்று, அப்பாக்களில் வரும் உவமையினையும் தொடர்களையும் உணர்ந்து, அவற் முல், அவர்க்குப் பெயர்வைத்த பெருமக்களின் நன்றிமற வாமைப் புலமைாலத்தைப் போற்றிப் புகழ்பெறுவோமாக.