பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 உவமையாற் பெயர்பெற்ருேர்

வெற்றியும் பெற்றால்லும் எனினும், அத்துறையில் அவர் கள் முழுதும் தோல்வியே கண்டனர் என்றும் கூறுவதற கில்லை; புலவர்கள் வரலாற்றினே முழுதும் அறிய முயன்று முடியாமற்போன கிலேயில், அப்புலவர்களின் பெயரை யாவது அறிந்து கூறலாம் எனத் துணிந்தனர்; அவவாறு அப்புலவர்களின் பெயர்களே அறியும் முயற்சியில், அப் லவர்களின் வரலாற்றின் ஒரு பகுதியினைத் தங்களே அறியாமலே அறிந்து அறிவித்துள்ளனர். உறையூர் மருத்து வன் தாமோதரனுர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனுர் என்ற பெயர்களே அறிவித்து அப்புலவர்களின் ஊர், தொழில், இயற் பெயர் அறியத் துணைபுரிந்தனர் ; மதுரை அளக்கர் ஞாழலார் மகனுர் மள்ளனுர், மதுரைக் கணக்காயனுர் மகனுர் நக்கீரனும் என்ற பெயர்களே அறிவித்து, அப்பெய. ருடைப் புலவர்களின் ஊரையும், பெயரையும், அவர்களின் தங்தைமாரையும் அறியவைத்தனர்; உறையூர் இளம்பொன் வணிகனுர், வெண்ணிக்குயத்தியார் என்ற பெயர்களே அறி வித்து, அவர்களின் ஊரையும், தொழிலையும் உணரத் துணை புரிந்தனர் ; கல்லாடனுர், கழாத்தலையார் போன்ற பெயர் களால், அப்புலவர்களின் ஊர் எது என்பதை எளிதில் அறியப் பேருதவிபுரிந்தனர். .

இவ்வாறு புலவர்களின் பெயர்களை அறிவித்தே, அவர்களின் வரலாறுகளே விளங்கவைத்தமையோடு அவர் கள் கின்ருரல்லர், பிறந்த ஊர், பெற்ற இயற்பெயர், மேற் கொண்ட தொழில், பெற்ற தந்தை, இவற்றுள் எதுவும் அறியமாட்டாப் புலவர்களேயும், அவர்கள் ஆக்கித்தந்த அரிய பாடல்களைப் பல்கால் பயின்று பயின்று, அப்பாக் களில் காணப்பெறும் இனிய உவமைகள், அரிய நபஞ் செறிந்த சொற்ருெடர்கள் இவற்றை உணர்ந்து, உளம் மகிழ்ந்து, அவற்றினலேயே அப்புலவர்களுக்குப் பெய. ரிட்டு நமக்கு அறிமுகம் செய்துவைத்துச் சென்றனர்.

இம் முறையில், உவமையாற் பெயர்பெற்ற புலவர்கள் அணிலாடுமுன்றிலார், ஓரேருழவர், கயமனுர், கல்பொரு சிறு. துரையார், கவைமகனுர், காலெறி கடிகையார், குப்பைக் கோழி