பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. ஓரிற் பிச்சையார்

இசையும், இன்பமும், ஈதலும் மூன்றும் அசைவுடன் இருப்போர்க்கு அரும்புணர்வில் என அறிந்த உள்ளத் தயை தலைவன், தன் மனைவியை அரிதிற்பிரிந்து பொருள் தேடச் சென்றுவிட்டான் ; சென்றக்கால், வினையை விரைவில் முடித்துக்கொண்டு கார்காலம் தொடங்க வந்து சேர்வன் ; வருத்தற்க என்று கூறிச் சென்றிருந்தான்். அவன் மனேவியும் தன் கடமை உணர்ந்தவள்; அறவோர்க் களித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்’ மகளிரின் தலையாயகடன் ; அக்கடனுற்ற பெரும்பொருள் தேவை; அதைப் பெற்றுவரச் செல்கிருன் கணவன் எனத் தெளிந்த உள்ளத்தளாய் அவன் செல்ல இசைந்தாள் ; செல்ல இசைந்தது அவள் கடமை உள்ளம் ; ஆனால் அவள் அன்புள்ளம், அவன் பிரிவைப் பொருது பெரிதும் வருந்துவதாயிற்று ; அவன் பிரிவையே எண்ணி எண்ணித் துயருறுவாளாயினள்.

இவளுக்கு ஒரு தோழி , அவள்வேறு தான்்வேறு என வாழ்ந்தறியாதவள் ; இவள் துயரைத் தன் துயரெனக் கொண்டாள்; அவள் துயர்போக்க எவ்வளவோ முயன் முள் ; முடியவில்லை; அவன் வந்தாலன்றி அவள் துயர் தீராது என உணர்ந்தாள்; அவன் வரவை எதிர்நோக்கும் தோழி, அவன்வரும் காலத்தை அறியப் பெரிதும் விரைந் தாள் ; அவன் கார்காலத்தொடக்கத்தே வருவதாகக் கூறிச் சென்ருன் ; ஆகவே, கார்காலம் எப்போது வரும் என்பதை அறிந்தால், அவன்வரும், காலத்தை அறிந்து கொள்ளுதல் கூடும்; ஆகவே கார்காலம் தொடங்கும் காலத்தை அறிந்துகொள்ள விரும்பினுள்; ஆனால், அதை அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை : ஒரு பொருளை எதிர்நோக்கி யிருப்பார்க்கு உள்ளம் ஒருவழி கில்லாது; அது எப்போது வரும், எப்போது வரும் என்ற ஏக்கமே பெரிதாம்; அதனல் அதுவரும் காலத்தை ஆராய்ந்து

உ. பெ.-7