பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்குல் வெள்ளத்தார் 103

மாலைக்காலம் மனக்கினிய காட்சிகளையுடையது ; அணிபெறத் தோன்றும் ஆறும், சோலையும்; மகளிர் சூடிக்கொள்ளுதற்காம் மணமிக்க மலர்களே மனம் உவக் கும்வகை தொடுத்து விலைகூறிவரும் மலர்மகள்; வீடு கோக்கிவரும் ஆக்களேத் தொடர்ந்துவரும் ஆனேறுகள் ; ஆணும் பெண்ணுமாய் அணி அணியாய்ப் பறத்துவரும் பறவைகள் ஆயன்குழல்; கோயில்முழவு ஆகிய இவை அக்கால அணிகளாம். மாலைக்காலத்தின் இம் மாண்பு களில் மாறுதல் நிகழ்தல் எப்போதும் இல்லை; ஆனால், கணவனெடு கலந்துறையும் மகளிர்க்கே இத்தகைய மாலேக் காலம் மனம் கிறை மகிழ்ச்சியினை அளிக்கவல்லதாம். கணவனைப் பிரிந்து தனித்துறையும் தலைமகள் ஒருத்திக்கு அம்மாலேக்காலமும், அக்காலக் காட்சிகளும், அவள் தன் கணவனேடு கூடியிருந்தகாலத்து இன்ப சிகழ்ச்சிகளே நினைவூட்டிப் பெருந் துயரையே தரும். காதலர் இல்லாத விடத்துக் கானும் மாலைக்காலம், கொலேக்களத்தே கொல்ல வரும் கொலேயாளிகளைப்போல் தோன்றிக் கொடுமை, செய்கிறதே ' என்றும், இம்மாலே இத்துணைக் கொடியது என்பதைக் காதல்கொடு கலந்துறை காலத்தே அறியேனே! என்றும் கூறி வருந்துகிருள் ஒரு தலைவி.

காதலர் இல்வழி, மாலே கொலேக்களத்து

ஏதிலர் போல வரும்.” - . (கிருக்: கஉஉச) மாலை நோய்செய்தல் மணந்தார் அகலாக கால அறிந்தது இலேன்.” (திருக் கஉஉசு)

மாலேயின் மாண்பு என்றும் ஒன்றேயாகவும், மகளிர், தம் சூழ்நிலைக்கேற்ப, அதை இன்பஊற்ருகவும், துன்புச் சூழலர்கவும் மாற்றி மாற்றிக் கொள்வதைப்போன்றே, இாவுக்காலத்தையும் மதிப்பர் தலைவனுேடுறையும் பெரு வாழ்வு பெற்ருளொருத்திக்கு இரவு பேரின்பும் தருவ தாய்த் தோன்றும். அத்தகையாள், இது காலை; இது பகல்; இது மாலை; இது எள்ளிருள்; இது விடியல் எனப் பொழுதைப் பிரித்தறியும் ஆற்றலையும் இழப்பள். அக்க அறிவு எல்லோர் காதலுக்குச் சான்ருகாது என்ப.