பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 உவமையாற் பெயர்பெற்முேர்

{ காலையும், பகலும், கையறு மாலையும்

ஊர் துஞ்சி யாமமும், விடியலும் என்றிப் பொழுதிடை தெரியின் பொய்யே காமம்.”

- - (குறுங் உஉ)

அப்பேறு பெற்ருள் பொழுது கழிவதையும் அறியாள்;

' செங்கதிர்ச் செல்வன் எழுச்சியும், பாடும் திங்களும் நாளும் தெளிதல் செய்யார் ”

என்று அவர் நிலையினே விளக்குவர் பெருங்கதையாசிரியர். அத்தகைய இனிய இரவையும், அதில் இன்துயிலையும் பெற்ருள் ஒருமகள், விடிந்ததுபொழுது என அறிவிக்கத் தன் குரல்ே எழுப்பித் தன் துயிலிற்குக் கேடுவிளேத்த சேவலைச் சினந்து சபிக்கும் குறுந்தொகைச் செய்யுள், மகளிர் தம் மனஇயல்பை நன்கு விளக்குவது காண்க.

இவ்வாறு, கணவரோடு உடனுறை மகளிர்க்குப்

பேரின்பம் தந்து அளவால் குறுகியதுபோல் தோன்றும் இரவு, தம் கணவர் கல்வி, பொருள் முதலாயின குறித்துப் பிரிந்து சென்ரு ராகத் தனித்துறை மகளிர்க்கு விறைதுயர் தந்து பெருகித்தோன்றும்; ஊரெல்லாம் துஞ்சியவிடத்தும் அம்மகளிர்க்கு உறக்கம் வராது; சென்ற கணவரையே எண்ணி இருக்கும் அவர் உறக்கம் கொள்ளார்; தாம்மட் டும் உறங்காது இருக்கவும், கவலையற்று உறங்கும் ஊரார் மாட்டுப் பெருங்கோபம் உண்டாம் ; கணவரோடு இருந்த காலத்தில் கணத்தில்கழிந்த இரவு, பிரிந்து தனித்துறை யும் காலத்தில் ஒர்இரவு ஒரு யுகம்போல் நீண்டுதோன்றும். "ஒருநாள் எழுநாள்போல் தோன்றும்.” அத்தகைய இாவை,

' கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள் - நெடிய கழியும் இா לל ‘. . . . (கிருக் சுகசுக) எனச் சினந்து கூறுகிருள் ஒரு தலைமகள். - .

மகளிர் மாலைக்காலத்தையும், நள்ளிருள் யாமத்தையும் மதிக்கும் மதிப்பீடு இது. மாலேகண்டு மருண்டு, இரவு