பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்குல் வெள்ளத்தார் - 105 .

கண்டு அரற்றும் தலைமகள் ஒருத்தியின் நிலையினே ஈண்டுக் காண்க. கணவன் யாதோ ஒரு காரணம்பற்றி வெளிநாடு சென்றுளான். தலைவி தனித்துவாழ்கிருள் ; ஒருநாள் மாலை ; மாலைக்காட்சிகள் தன் மனத்துயரைத் துரண்டி விட்டதாக வருந்தி நிற்பாளாயினள் ; அவள் அருகே அவள் ஆருயிர்த்தோழி கிற்கிருள் ஆற்றியிருப்பதே மக ளிர்க்கு அறமாம் என அறிந்த அறிவுடையாளவள் கான் அறிந்த இவ்வறவுரையினைத் தல்ைவிக்கு உணர்த்தி ஆற்றக் கடமைப்பட்டவள் தான்் என உணர்ந்தாள் ; இம் மாலைக் காட்சிகளால் மதிமருண்டு மனத்துயர்கொண்டு வருந்து வது அழகன்று ; ஆற்றியிருத்தலே அறநெறியொழுகும் அன்புடை மகளிர்க்கு அறமாம் என்று கூறினுள்; அது கேட்ட தலைமகள், தோழி ஆற்றியிரு ஆற்றியிரு; என் கின்றன ; ஆற்றியிருக்கவே யானும் விரும்புகின்றேன்; ஆனால், அந்தோ யான் என்செய்வேன் பகலோ கழிந்து. விட்டது; முல்லேயும் மலர்ந்து மணங்கமழத் தொடங்கி விட்டது; ஞாயிறு வெப்பம் குறைந்து குளிர்த்துவிட்டது; இந்த இன்பச்சூழல், அந்தோ ! என்னைச் செயலறும்படி செய்துவிடுகிறதே! என்செய்வேன் எவ்வாறு ஆம்.அ வேன்? கின் அறிவின் துணைகொண்டு, இரவு தொடங்கும் வரை உளதாகிய சிறுபொழுதாம் இம் மாலைக்காலத்தை ஒருவாறு கழித்துவிடுதலும் கூடும்; ஆனால், அதனல் யாது பயன் இம் மாலையைத் தொடர்ந்து வருகிறதே இரவு அவ்விாவிற்கு எல்லே காண்பதே அரிதாயிற்றே ! கடலிற்குக் கரை காணினும் காணலாம், இவ்விாவிற்கு எல்லேகாணல் இயலாதே! அத்துணை நெடியஇரவை யான் எங்ஙனம் ஆற்றுவேன் என் ஆற்றல் இத்தகையதாகவும், அதனை அறிந்துகொள்ளாது ஆற்றியிரு; ஆற்றியிரு’ என ஒபாது உரைக்கின்றனேயே கின் செயலின் அறியாமை தான்் என்னே ? என்றுகூறி, தலைவனப்பிரிந்து தனித்து வாழ்தலறியாத் தன் உள்ளத்தினே உணர்த்தினுள் : --

"எல்லே கழிய, முல்லை மலாக்,

கதிர்சின்ம் தணிந்த கையறு மா?லயும் இாவரம் பாக நீர்தினம் ஆயின்,