பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i08 உவமையாற் பெயர்பெற்ருேர்

வுடனே தலைவிக்குச் சினம் பிறக்கும்; நம் தலைவரை நம் கண்முன் பிறர் பழித்துரைக்கின்றனரே; அவரைப் பழித் துரைக்க இந்தத்தோழி யார்?' என வெகுள்வாள் ; ஆனால் அவளோ குணமென்னும் குன்றேறி நின்றவள்; ஆதலின் உடனே சின்ம் மறையும்; தன் தவறு தன்முன் வந்துகிற் கும்; தலைவன் தவறு செய்துவிட்டான் என்று எண்ணிய தாலன்ருே யான் அவன்பிரிவை ஆற்ருது அாற்றினேன்? யானே அவன்மீது குறைகண்டேன் எனின், அவன் உண்மை இயல்பை-உள்ள அன்பை உள்ளவாறு உணராத பிறர், அவன்பால் குறை காண்பதில் வியப்பொன்றும் இல்லயன்றே ஆகவே, தோழி கலேவனைப் பழித்துரைத்த தற்கு யானே காரணம்; தவறியவள் யான் ; தோழி அல்லள் என்று உணர்வாள் ; உடனே அழுகை ஒயும்; அழுகையைக் கைவிடுவதோடு கில்லாள் ; தோழி கலை வன். ஏதோ தவறு செய்துவிட்டான் என்று கூறுகின் |றனையே! அவரை நீ அறிவாயா? உலகமே கிலைமாறின அலும் அவர்மாட்டுக் குறை நிகழாது; தெரியுமா? அவரை அறியாத நீ அவரைப் பழிகூறுவதை இனியும் மேற்கொள் ளாதே’ என்று கூறவும் தலைப்படுவள். தலைவியின் செயல் கண்ட தோழி தன் கடன் முடித்த வெற்றிக்களிப்பால் உள்ளூர நகைகொள்வள் ; இது தோழியின் தொண்டு களுள் ஒன்று; அத்தகைய தோழி ஒருத்தியின் தொண் டினேக் கூறுவதே இச் செய்யுள்.

தலைவியொருத்தி பிரிந்துசென்ற தன் கணவனேயே கினேந்து வருந்திக்கொண்டிருக்கிருள்; அவள் கோழி அவள் துயர் போக்கத் தன்னலானதெலாம் செய்து புார்த்துவிட்டாள்; பயனில்லை ; இறுதியில் தலைவியிடம் சென்ருள்; அவளை நோக்கி, தலைவி! யானேகள் குட்டி .யாய் இருக்கும்போது பார்த்திருக்கிருய் அல்லவா ?” என்ருள்; தோழி ஏதோ புதிய கிகழ்ச்சி யொன்றைக் கூறப்போகிருள் என எண்ணிய தலைவி ஆம்” என்ருள் ; உடனே தோழி, அந்த யானைக் கன்றுகள் காட்டில் வாழும் குறுகிய முன்கைகளையுடைய குறவர்களின்