பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 உவமையாற் பெயர்பெற்ருேர்

பார்த்துக்கொண்டிருக்க, நீர்மேலோங்கி எழுந்து சிதறு மாறு துடும் எனக்குதித்து நீர்நிலையின் அடிவரை மூழ்கிச் சென்று மண்கொணர்ந்து காட்டி மகிழ்வான் ; அத்தகைய இளமைவாழ்வையுடைய அவன் இப்போது ஆண்டு முதிர்ந்து கிழவனுகிவிட்டான்; எடை தளர்ந்துவிட்டது ; ஆகவே கையில் ஊன்றுகோல் எந்திக்கொண்டான் ; கோல் கொண்ட பின்னரும் நடுக்கம் தீர்ந்திலது ; சில சொற் களைக் கூறியவுடனே பெருமூச்சுவாங்கத் தொடங்கிவிடும்; இருமல் வேறு இடையிடையே தோன்றித் துயர்செய்யும்; இந்த அளவிற்கு மூத்துவிட்டான் , அந்த கிலேயில் அவ லுக்குத் தன் இளமைக்கால இனிய காட்சிகள் கண்முன்பு கிற்கலாயின. அவற்றைக் கண்ட அவன் கண்கள் நீர் மல்கின; அவனும் அந்தநாள் வாழ்வு எங்கோ சென்று மறைந்துவிட்டதே ! அதை மீண்டும்பெற எங்கேசென்று தேடுவேன் ' என்று கூறிக் கலங்குவானுயினன்.

'இனி நினைந்து இாக்க மாகின்று ; திணிமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத், தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து, தழுவுவழித் தழிஇக், தாங்குவழித் தாங்கி, மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்ாணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக் காையவர் மருளத் திரையகம் பி கிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்துமணல் கொண்ட கல்லா இளமை அளிதோ தான்ே யாண்டுண்டு கொல்லோ ? தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று இரும்இடையிடைந்த, சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே.” (புறம் : உசங்.)

இந்தப் பாட்டில், கிழவர் எந்திய கைத்தடியினைப் பற்றிக் கூறுங்கால், அது தலையில் பூண் உடையது; மிக வும் பருமை உடையது என்று கூறியது, அந்த முதிர்க்க கிலேயில் அவர்க்குப் பொருளாய் கிற்பது அத்தடி ஒன்று