பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. பதடிவைகலார் போலிப் பொருள்கள் புகுந்துவிட்ட காலம் இது; உண்மையான பொருள் ஒன்று இருந்தால், அதன் உண்மை யான இயல்பினேப் பெருமல், அதன் உருவத்தைமட்டும் பெற்றிருக்கும் பொருள் ஒன்று இருக்கும். நெல் உண்டு; நெல்லைப்போன்ற பதடி உண்டு; அதன் உள்ளே அரிசி இராது; அதைக் கருக்காய் என்பர்; மக்களிலும் பதடி உண்டு என்பர் வள்ளுவர்; பயனில்சொல் பாராட்டு வாளை மகன் எனல் மக்கட் பதடி எனல் ” (திருக்: க.க.அ) என்ற அவர் குறள் காண்க; மக்கட் பண்பில்லாக் கயவர் களைக் கூறுங்கால், மக்களே போல்வர் கயவர்” . (திருக்: க0 எக) என்று கூறுவதையும் காண்க. இவ்வாறு உலகப் பொருள் கள் ஒவ்வொன்றிற்கும் போலிகளாகிய பதடிகள் இருப் பதைப்போன்றே, நாட்களிலும் பகடிகள் உண்டு; நாட் களில் பதடியாவது, நாள் பயன்படாம்ல் கழிவது; வீர லுக்கு ஒருநாள் பயன்படாத நாளாகக்கழிதல், அன்று அவன் போர்க்களம் புகுந்து பகைவர்களை அழித்து வெற்றிகொண்டு, அம்முயற்சியில் புண்பெருது கழிதலாம்; ' விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளே எடுத்து” (திருக்: எ.எசு) என வள்ளுவர் பேசும் வீரத்தின் சிறப்பை நோக்குக. நாள் அளிக்கும் பயன் இது என்பது அவரவர்கள் மனநிலைக்கேற்ப மாறுபடும்; குறுந்தொகையில் வரும் தலைமகன் ஒருவன், பயனின்றிக் கழித்த பகடிநாள் ஒன் றைக் குறிப்பிடுகின்ருன்; மணந்துகொண்ட மனேவியோடு மனேயில் இருந்து அவளோடு உறங்கி எழுந்த நாட்களே பயனுடைய நாட்கள்; அவைதாம் உண்மையில் வாழ்க்க