பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிலாடு முன்றிலார் 9

வழியோர ஊர்களின் அழிவைப்பற்றிக் கூறவே வேண் டுவதில்லை. பகையரசர்களாலும், பிறராலும் எளிதில் அழிவுக்குள்ளாகும் ஊர்கள் அவைகளே; ஆகலின், அத் தகைய ஊர்களில் மக்கள் வாழவும் அஞ்சுவர்; அஞ்சி அஞ்சி ஆண்டே வாழ்வதினும் வேற்றார் சென்று வாழவே அவர்கள் விரும்புவர்; ஆதலின், அவ்வூர்கள் பலவும் மக் களே இழந்தே காணப்படும்; மக்கள் குடிவாழ்வதே ஊர் களுக்கு அழகாம்; அவர்கள் ஆண்டு வாழாராயின், அவ்

டங்கள் அழகிழப்பது மட்டும் அன்று, அவை ஊர் எனவும் படா ; பாழிடம் என்றே அழைக்கப் பெறும். அங்கிலையில், அவை கிருவிழாக்காலப் பெரு நலன்களையே பன்றி, உள்ள அழகையும், ஊர் என்ற பெயரையும் இழந்து பாழுறும்.

இவ்வாறு விழாநிகழ் ஊர்களின் வெற்றிச் சிறப் பினேயும், வாழ்வோர் போகிய பேரூர்களின் பாழ்பட்ட கிலேயினையும் உணர்ந்த தலைமகள், கணவனேடு கலந்துறை காலத்தே தான்் பெறும் கவினுக்கும், அவனைப் பிரிந்துறை காலத்தே எழில் குறைந்து விளங்கும் தன் இழி நிலைக்கும் அவ்விரண்டினேயும் முறையே உவமையாக்கி உரைப்பா ளாய்ப் பாடியுள்ளார் ஒரு புலவர்.

' காதலர் உழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற; அத்தம் கண்ணிய அங்குடிச் சீறுார் மக்கள் போகிய அணிலாடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று - அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.”

(குறுங் சக)

கணவனைப் பிரிந்து கவினிழந்து கிற்கும் தலைமகள் கிலையினே விளக்க மேற்கொண்ட உவமை மக்கள் போகிய சிறார் என்பதாம்; அவ்வூரின் தனிமையினேயும், அதன் பாழ்பட்ட கிலேயினையும் விளக்கவந்த புலவர், அவ்வூர் அணிலாடு முன்றிலே உடையது என்று கூறி அமைவாராயி