பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உவமையாற் பெயர்பெற்ருேர்

னர். அணில்கள், உயிர்வகைகளுள் பேரச்சம் உடை யவை; தாம் ஏறி ஆடி மகிழும் மரத்தின் கிளைகள் சிறிதே அசையினும் அவை அஞ்சும்; மக்களோ பிறரோ வரு, வதை உணர்ந்தால் ஒடி ஒளியும் இயல்பின; மக்கள் கி.மு லேக் காணினும் மருளும்; அவற்றின் இயல்பு இது வாத லின், மக்களோ பிற உயிர்களோ பயில இயங்கும் இடங் களில் அவற்றைக் காணல் இயலாது; அவர் அற்ற இடங் களில் மட்டுமே அவை இயங்கும். "வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது' (பெரும்பாண். 86) என்பர் பிறரும். இவ்வாறு அஞ்சும் இயல்புடைய அணில்கள் பல கூடி அச் சம்விட்டு ஆடி மகிழும் என்றால், அவ்விடம், மக்கள் வாழ் விழந்த வெற்றிடமாதலே வேண்டும். இவ்வாறு வாழ் வோர் போகிப் பாழ்பட்ட இடம் என்பதை உணர்த்த, அணில்கள் ஆடிமகிழும் முன்னிடங்களையுடைய, பொலிவு குன்றித் தனிமைகொண்ட இல்களையுடைய இடம்; அணி லாடு முன்றில் புலம்பில் ' என்று கூறி உவமை அமைத்த சிறப்பால், இப் பாவின் ஆசிரியர், அணிலாடு முன்றிலார் என்ற அழகிய பெயரினைப் பெற்றுப் பெருமை உற்ருர்,