பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. ஒரேருழவர்

ஒரு பாட்டின் பொருளை உள்ளவாறு உணர்தல் வேண்டுமாயின், அப் பாட்டைப் பாடிய புலவன் உள் சாத்தை முதற்கண் உணர்தல்வேண்டும்; புலவன் உள் ளத்தை உணர்தல், அப் புலவன் வாழ்ந்த காலத்தின் சூழ் கிலேயினே நன்கு உணர்ந்தார்க்கே இயலும் ஒரேருழவர் பாடிய பாக்களுள் நமக்குக் கிடைத்தன. இரண்டு; ஒன்று, அகத்துறை தழுவியது; பிறிதொன்று, புறத்துறைப் பொருள் உணர்த்துவது; இரண்டும் இரு மணிகள்: அவற்றை அறிந்து, அவற்றின் பொருளை உணர்ந்து மாண் புற விரும்பும் நாம், அவர் வாழ்ந்த காலத்தின் இயல்பை யும், அவர் உள்ளத்தை உணர விரும்பும் காம் வாழும் காலத்தின் இயல்பையும், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் சற்று நோக்குவோமாக.

உழவுத்தொழில் இன்றும் நடைபெறுகிறது; ஆனால், இன்று அத் தொழில் நடைபெறும் முை றக்கும், பண்டு 5 நடைபெற்ற முறைக்கும் பெரிதும் வேறுபாடுண்டு.

இன்று, கிலத்திற்கு உரியவன் வேறு; அங்கிலத்தை உழுபவன் வேறு ; கிலத்திற்குரியவனே அங்கிலத்தை உழுகிருன் என்பதில்லை; கிலத்திற்குரியோர் பெரும் பாலும் உழுதொழில் மேற்கொள்வதில்லை; நிலம் இருக் கும் ஊரிலும், நிலத்திற்குரியவர் வாழ்வதில்லை; கிலம் எங்கோ ஒர் ஊரில் இருக்கும்; கிலத்திற்குரியவர், நெடுங் தொலைவில் உள்ள ஒரு பேரூரில் வாழ்வர்; தங்கள் கிலம் எவை எவை? அவை எங்கெங்கே உள்ளன? அவற்றைப் பயிரிடுவோர் யார்? அவற்றில் பயிரிடப்படும் பொருள் எது? அவர்கள் பயிரிடும்முறை பாது தங்கள் தொழிலிற்கு வேண் டும் தண்ணீரை எங்கிருந்து பெறுகின்றனர்? என்ற இவற்றை அறியாத பெருகிலக்கிழவர் பலராவர். ஆண்டு தோறும் இவ்வளவு செல் என்ற உடன்பாட்டின்கீழ் கிலம் உழுவோர்பால் ஒப்படைக்கப்பட்டிருக்கும்; கிலம் விளக்