பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உவமையாற் பெயர்பெற்ருேர்

காலும் விளையாவிட்டாலும் குறிப்பிட்ட அந் நெல்லோ அதற்கு நிகரான பொருளோ அவர்களுக்கு வந்து சேர்ந்து விடும். அதனல், மழை பெய்யவில்லையே பெய்யாத மழை பெய்துவிட்ட்து; கிலத்தை உழுது பயிரிடுதற்கான ஏர்கள் கிடைக்கவில்லையே! என்ற கவலையினே அவர்கள்பால் காணல் இயலாது. ஆகவே, இத்தகைய பெருகிலக்கிழவர் களே மட்டுமே அறிந்த்ாால், ஒரேருழவர் தம் உள்ளத்தை உணர்தல் இயலாது.

நிலத்திற்கு உரிமை இல்லாதவன் கிலத்தை உழுகின் முன்; கிலத்தை உழுது பயிர் செய்வதற்காக அவனுக்கு அளிக்கப்படும் பங்கு, பெரும்பாலான இடங்களில் அவன் மனதை மகிழ்விக்கும் அளவில் அமையவில்லை; கிலத்தை உழுவதற்காக அவனும், அங்கில முதலாளியும் மேற்கொண் டுள்ள ஒப்பந்தம் அவனுக்கு ஊக்கமூட்டுவதாக இல்லை. வாழ்வை வளர்க்க, உழுதொழிலேபோல் வேறுபல தொழில் களும் உள என்பதையும் அவன் அறிந்துகொண்டுள் ளான்; இக் காரணங்களால், அவன் உழுதொழிலில் ஊன்றிய உள்ளம் செலுத்துவதில்லை; அதற்காகப் பெரும்பொருள் செலவிடவோ, அரும்பாடுபடவோ அவன் விரும்புவதில்லை.

நிலத்திற்குரியவனே அங்கிலத்தின் உழவுத்தொழிலை யும் மேற்கொண்டுள்ளான் என்ருலும், அவனுக்கு அங் நிலம் விளங்தால்தான்் வாழ்வு என்ற கிலே இல்லை; உழவே அன்றி வாணிபம், வேறு பிற தொழில்கள்போன்ற பல வகைகளில் வருவாய்க்கு வழிதேடிக் கொள்ளுதல்கூடும் என்பதை அவன் அறிந்துளான் ஆதலின், உழவு ஒன் றையே நம்பி இருக்கவேண்டிய கிலே அவனுக்கும் இல்லை; அதனுல். தனக்கு வசதியாக நீரும் ஏரும் கிடைத்தவழி நிலத்தை உழுதுகொள்ளலாம் என்று எண்ணுகிருனே ஒழிய, எப்படியாவது ஏர் கொண்டுவர வேண்டும்; எப்பாடு பட்டாவது நீர்பெறவேண்டும்; இன்றேல் நீர்கிடைத்த போதே தன் தொழிலை எத்துணைப் பாடுபட்டாவது முடித்துவிடவேண்டும் என்று அவன் அவசரப்படுவதில்லை.