பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 21

வேண்டும் என்று எண்ணினுன் , அவனிடம் உள்ளது ஒரே ஒரு ஏர்; அதை எடுத்துக்கொண்டு கிலத்தை அடைக் தான்் ; கிலம் ஈரம்பட்டுப் பக்குவமாக இருப்பது உணர்க் தான்் ; ஏர் பூட்டி உழத் தொடங்கிவிட்டான் ; வெய்யில் ஏற ஏற, ஈரம் சிறிது சிறிதாகப் புலர்ந்து சிலப்பக்குவம் குறைவதை உணரலாயினன். அந்தோ ஈரம் போய் விடுகிறதே இவ்வளவு கிலத்தையும் உழுதாகவேண்டுமே ! நம்மிடம் இருப்பது இந்த ஏர்தான்ே? இந்த ஏரைக்கொண்டு இவ்வளவு கிலத்தையும் எப்போது உழுது முடிப்பேன் ? அதுவரை ஈரம் கில்லாதுபோல் தோன்றுகிறதே! அந்தோ! என்செய்வேன்? எப்படி உழுது முடிப்பேன் ?’ என்று அவன் உள்ளம் துடியாய்த் துடிக்கத் தொடங்கிவிட்டது : மனத்தில் அமைதி இல்லை; உள்ளமும் உடலும் ஒருவழி கிற்கவில்லை. ' உழவேண்டிய சிலம் இன்னும் உளது; சாம் புலர்ந்துகொண்டே இருக்கிறது ; உள்ளதோ ஒரே எர்! எப்படி உழுது முடிப்பேன் இந்த ஒரு ஏரைக்கொண்டு? எப்போது உழுது முடிப்பேன் இந்த ஒரு ஏரைக்கொண்டு? என உள்ளம் துடிக்க, உள்ளம்வழி செயல் துடிக்க, ஏரை

ஒட்டு ஒட்டு என விரைந்து ஒட்டுவானுயினன்.

'தலைவியைக் காணவேண்டும்; இடையிலே மிக நீண்டு கிடக்கும் கடத்தற்கரிய வழியைக் கடந்து சென்று காண வேண்டும் ; எப்படிக் கடப்பேன் இப் பெருவழியை எப் போது காண்பேன் தலைவியை’ எனத் துடிக்கும் தலைவன் உள்ளத் துடிப்பிற்கு, “ எல்லா கிலத்தையும் உழுதாக வேண்டும்; ஈரம் புலர்வதற்கு முன்பே உழுதாகவேண்டும்; என்னிடம் உள்ள ஒரு ஏரைக்கொண்டு எப்படி உழுது முடிப்பேன் ? எப்போது உழுதுமுடிப்பேன்’ எனத் துடிக்கும் ஒரேருழவன் உள்ளத்துடிப்பை உவமைகாட்டி, அக்கால ஆண்மக்கள்தம் உள்ளச் சிறப்பையும், உழவின் அருமையையும் ஒருங்கே விளக்கி, விளக்கிய அக்காரணத் தினலேயே, தம் இயற்பெயரைக் கொடுத்துவிட்டு ஒரேருழவர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்று அறிவுடைப் பெருமக்

களால் பாராட்டப்பெற்ருர் நம்புலவர் பெருந்தகையார்.