பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உவமையாற் பெயர்பெற்ருேர்

உண்டாயிருக்குமோ?’ என்றெல்லாம் பலப்பல எண்ணி வருந்தும் தலைவியின் துயர்கிலே அவன் கண்முன் வந்து நிற்பதுபோல் தோன்றிற்று.

"அவள் அவ்வாறு மனக்கவலை கொண்டு மாழ்கினல், அவள் அழகு என்னும் உள்ளக்கவலையால் உடல் நலம் குன்றுமே! அதனல், அவள் அழகிழந்து அழிவளே! அந்தோ அவளேப் பிரிந்து வருங்கால் பார்த்து மகிழ்ந்த அவள் தோள் அழகையும், கண்ணழகையும் மீண்டு சென்ற வழிக் காண்பனே ? காணவேண்டுமாயின், இன்றே ஆங்கு அடைதல்வேண்டும்; இப்பொழுதே அடைதல்வேண்டும்; ஆனல், அந்தோ அஃது எளிதில் இயலாதபோல் தோன்றுகிறதே! அவள் இருக்கும் இடத்திற்கும் நமக்கும் இடைப்பட்ட இடம்தான்் எத்துணைத் தொலைவு மிகமிகச் சேய்மைக்கண் அன்ருே அவள் இருக்கிருள் செல்லும் வழியாவது எதமும் இடையூறும் இல்லா நல்வழியாக உளதா ? அது, காடும் மலையும் கானுறும் கலந்தன்ருே காட்சி அளிக்கிறது இத்தகைய அரிய - கொடிய மிக நீண்ட வழியை எப்போது கடப்பேன் ; பையக் கடத்தல் கூடாதே; குறித்தகாலம் சிறிது கழியிலும் பொரு அவளே, இவ்வழியை மெல்லக் கடந்துசென்றால் காணவும் இய லாதே; அந்தோ யாது செய்வேன்? எப்படிக் கடப்பேன் இப் பெருவழியை எப்போது கடப்பேன் அவளை எப் போது காண்பேன் அதுவரை எவ்வாறு ஆற்றியிருப் பேன் ' என்றெல்லாம் உள்ளம் துடிக்க விற்கிருன்.

இத் தலைமகன் உள்ளத்துடிப்பை விளக்க, புலவர்

ஒரேருழவர் அழகிய ஒர் உவமையினே மேற்கொண்டுள்ளார்.

உழவன் ஒருவன்; சிறிது சிலம் உடையவன் ; அந் கிலத்தையே நம்பிவாழும் , பொருள்வளம் உடையவன்; தன் கிலத்தைப் பயிரிட்டுப் பயன்பெறவேண்டும் என்ற எண்ணத்தால் பல நாட்களாக மழையை எதிர்நோக்கி இருந்தான்். பெய்யாத மழையும் வந்து பெய்து ஒய்ந்தது ; ஈரம் புலர்வதற்குமுன்பே எல்லா கிலத்தையும் உழுதுவிட