பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 23

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் ’ -

" ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.' (கிருக் : சசு, ச.அ)

எனத் துறவறத்தினும் இல்லறமே நன்றாம் என நாட்டுவர்.

உலகில் பிறத்தல், நாம் ஒருவர்மட்டும் வாழ்ந்தால் போதும் ; நம் வாழ்வுமட்டும் உயர்ந்தால் போதும்’ என்ற குறுகிய நோக்கத்திற்காதல் கூடாது ; ஊரெல்லாம் வாழ வேண்டும் அவர்கள் வாழ்விற்குத் தான்் துணையாதல் வேண்டும் ; பிறர்வாழத் தான்் துயர் உறுவதால் தவறு ஒன்றும் இல்லை ; தனித்துவாழ்ந்து சிறு துயரும் தாங்க மாட்டாது, துறவறம் மேற்கொள்வதிலும், சுற்றம் சூழ வாழ்ந்து, அவர்கள் நல்வாழ்வு வாழத் துணை புரிந்து, அதனுல் துயருறவேண்டிவரிலும் அதையே பெருமக்கள் விரும்புவர். பல்லார் பயன் துய்க்கத் தான்் வருக்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன் ” என்பர் புலவர்கள்.

இல்லறத்தை விட்டுத் துறவறத்தை மேற்கொள்வது அவ்வளவு எளிய செயல் அன்று நாட்டைவிட்டுக் காட்டை அடைதல் எளிதில் கிகழக்கூடியதன்று உலகில் வாழ்வோர் நாம் ஒருவர் மட்டும் அன்று ; நம்மைச் சூழ ஒரு பெரும் சுற்றம் உளது ; அவரவர்க்கு வேண்டுவன எல்லாவற்றையும் முடித்துவைத்துவிட்டுத் துறவறம் மேற்கொள்வது அத்துணை எளிதன் று. அவ்வளவு பெருஞ் சுற்றத்தையும் அறவே மறந்துவிட்டு, அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று எண்ணித் துறந்து ஒடுவதும் அழகன்று ; ஆகவே சுற்றம் சூழ வாழ்பவர் துறவறத்தை மேற்கொள்ளுதல் ஆகாது : கூடாது ; அக் தகைய சுற்றம் எதுவும் இல்லாதவரே இல்லறத்தை எளிதில் விட்டுத் துறவறத்தை மேற்கொள்ளுதல் இயலும்.

இக் கொள்கையைப், புலவர் ஒரேருழவனர் மற்றொரு வகையால் விளக்குகிருர் :