பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உவமையாற் பெயர்பெற்ருேர்

'காணும் இடமெங்கும்மணல் பரந்து விளங்கும் ஒரு பெரு வெளியில் தனித்த ஒருவல்ை துரத்தப்படும் ஒரு மான் மிக எளிதில் கப்பி ஓடிவிடும் ; ஆனால், மலேயும் மாமும் செறிந்த ஒரிடத்தே பலர் கூடி வேட்டையாடும் மான், அவர்களைத் தப்பி ஓடுதல் இயலாது ; பரந்த மணல் வெளியில் வாழும் மான்ப்ோல் தனித்து வாழவில்லை நான்; அவ்வாறு வாழ்ந்திருந்தால் எப்போதோ துறவறத்தை மேற்கொண்டிருப்பேன் ஆனால், மரம் பல செறிந்த காட்டில் வாழும் மான்போல், ஒக்கலும் மக்களும் சூழ உள்ள இடத்திலன்ருே நான் வாழ்கின்றேன் , துறவறம் மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தை அவர்கள் வாழ்வு, அறவே மறக்கச் செய்துவிடுகின்றதே; என் கால் கட்டுக் களாம் அவர்களை மறந்து, நான் எங்ஙனம் துறவறம் மேற் கொள்வேன் ' என்ற கருத்தமைந்த பாடல் அவர் உள் ளத்தை உணர்த்துவது அறிக :

' அதள் எறிந்தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, ஒடி உய்தலும் கூடுமன் ! ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.” (புறம் : க.க.க.) ஒரேருழவனேயும், ஒருவன் ஆட்டும் புல்வாயினையும் உவமை காட்டி, உழவின் சிறப்பையும், உலகியல் உணர் வையும் உணர்த்திப் புகழ்பெற்ற புலவர் ஒரேருழவனர்

உள்ளம் உணர்ந்து பாராட்டற்குரியதன்ருே!