பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உவமையாற் பெயர்பெற்ருேர்

களாக நமக்குக் கிடைத்துள்ளன இருபத்து மூன்று : இவற்றுள் ஒன்றே புறப்பாட்டு ; ஏனைய எல்லாம் அகப் பாடல்களே; அவ் அகப்பாடல்கள் இருபத்திரண்டிலும், அவர்க்குப் பெயர் சூட்டும் பெருமை வாய்ந்த இப்பாட்டு ஒன்று மட்டுமே மருதத்தினையினைச் சார்ந்து வேறு பொருள் குறித்ததாம். ஏனய இருபத்தொரு பாடல் களும் ' உடன் போக்கு ' என்ற ஒரு துறையினையே பல் வேறு வகையான் விளக்கிக் கூறுகின்றன.

தோழியின் துணை ஒன்றே பற்றுக் கோடாகத் தாய் தந்தையர் அறியாமல் களவில் காதல் கொண்டு வாழ்ந்த ஒரு தலைவனும், ஒரு தலைவியும், தம் தாய்தந்தையர் அறியாமல் மேலும் களவில் காதலித்து வாழ்தல் இயலாது என்பதையும், கமருக்கு அஞ்சித் தம் காகல் ஒழுக்கத் கைக் கைவிடுதலும் இயலாது என்பதையும் உணர்ந்து, தம் களவொழுக்கத்திற்கும், தம் கற்பு நெறிக்கும் கேடு நிகழா வகையில் வாழவேண்டுமாயின், தமர் அறியா வண்ணம் தலைமகன் ஊர் சென்று மணந்து வாழ்தலே செய்யக்கடவது எனத் தெளிந்த அறிவினராகி ஒன்று கூடிப் போய்விடுவதே உடன்போக்கு எனப்படும்.

உடன்போக்கு நிகழ்வதற்கு முன்னும் பின்லுமாக, உடன்போக்கே இறுதியாக மேற்கொள்ள வேண்டுவது என்பதைத் தோழி உணர்தல், உணர்ந்த தோழி அதைத் கலைமகற்கும் தலைமகட்கும் உணர்த்தி அவர்களே உடன் போக்கிற்கு உடன்படுத்தல், கலைவி, தலைவளுேடு சென்று விடுதல், இடைச்சுரத்தில் அவர் இயல்பும், ஆங்கு அவரைக் கண்டார் இயல்பும், தன் மகள் உடன்போக்கினே மேற் கொண்டுவிட்டாள் என்பதறிந்த செவிலி அழுது அரற்றி அவளேத் தேடிச்சென்று மீளுதல், தலைமகளைப் பெற் றெடுத்த கற்ருய், வீட்டிலும் த்ெருவிலும் இருந்து, சென்ற மகளே கினைந்து புலம்பல் ஆகிய செயல்கள் நிகழும் ; இவற்றையெல்லாம் வகுத்துரைப்பதும் உடன்போக்கின் பாற்படும். உடன்போக்கு, ஐம்பத்தாறு உள்துறைகளே, உடையது என்பர் இலக்கண ஆசிரியர்கள். இத்துறை