பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமனுர் 27

களைப் புலவர் கயமனுர் மிகமிகத் தெளிவாகச் சொற்சுவை, பொருட்சுவை தோன்றப் பாடியுள்ளார்.

உடன்போக்கு சிகழ்ச்சியில் பெரும்பங்கு கொள்வார் மகளிரே ஆவர்; அம் மகளிர் தோழி, தலைவி, செவிலி, நற்ருய் என நால்வேறு வகையினராவர் ; இந்நால்வகை மகளிரின் மன இயல்பினேயும், அவர் ஒழுக்கத்தின் உயர் வினேயும் உணர்த்தும் பகுதி, இவ்வுடன் போக்குப் பகுதியே யாம் ; தோழியின் கடமையுணர்ச்சி, தலைமகளின் கற்புச் சிறப்பு, தாய்மார்களின் அன்புள்ளம் அவ்வளவும் இங்கே தான்் நன்கு படம்பிடித்துக் காட்டப்படும்; மகளிர் கற்பே பொற்பெனக்கொண்ட மாண்புடை மனேவியாய், அறிவே உருவென வந்த தோழியாய், அன்பின் கிருவுரு வாம் தாயாய் விளங்கவேண்டியவ. ராதலின், அப்பண்பு களைக் குறைவறப் பெற்று விளங்கும் தமிழ்நாட்டு மகளிர் தம் இயல்பினைத் தெளிய உணர்தல் வேண்டும் ; ஆகவே, கயமஞர் போற்றும் கோழி, தலைமகள், காய், செவிலி ஆகியோரின் பண்புகளை உணர்ந்து, உடன்போய், உயர்வு பெறுவோமாக !

தலைவனும் கலேவியும் ஒன்றுகலந்த அன்பினராய் வாழ உறுதுணே புரியும் தோழி, அவர்கள் அன்பு வாழ்க் கைக்கு உடன்போக்கு ஒன்றே வழியாம் எனத் துணிந்து, அங்கிலேயினே இருவர்க்கும் எடுத்துக்கூறி இசைய வைக் தாள். தலைமகன் போக்கிற்கு ஆவன முடித்துக்கொண்டு குறித்த நாளன்று குறித்த காலத்தில், குறிப்பிட்ட இடத் தில் வந்து சேர்ந்தான்்; அவர்கள் வெளியேறு கற்காகக் குறிப்பிட்ட காலம், ஊரில், மகளிர் தயிர்கடையும் இருள் நீங்கியும் நீங்காமலும் உள்ள வைகறைப் பொழுது, கலேவி வெளியேறுங்கால் தன்னை யாரும் அறிந்து கொள் ளாவண்ணம் தன் உருவினேக் காந்துகொண்டாள் ; நடந்து செல்லுங்கால், ஒலி எழுப்பிக் தன் செலவினைப் பிறர் அறி யச் செய்யும் என்று அஞ்சித் தன் காற்சிலம்பினை நீக்கி ள்ை ; அதையும் அன்றுவரை தான்் ஆடி மகிழ்ந்த பங்தை