பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - உவமையாற் பெயர்பெற்ருேர்

யும் ஒரிடத்தே வைக்கச் சென்ருள் அங்கிலையில் அவள் உள்ளம் அவளை அறியாமல் நெகிழத் தொடங்கிற்து.

  • பொழுது புலர்ந்ததும், என்னேடு ஆடிமகிழும் என் ஆயத்தார் அனைவரும் வருவர்; வந்து என்னேத் தேடுவர்; என்னேக் காணுமல் அலைவர் ; அலைவார் கண்முன் இவை காணப்படும் ; இவற்றைக் கண்டு என் நிலையினை உணர்வர் ; உணர்ந்து, உணர்விழந்து, உளம் நொந்து அழுது கிற் பர்; அந்தோ! அப்போதைய அவர்கள் கிலேயினைக் காண வும் உள்ளம் நடுங்குமே!’ என்று எண்ணினுள். அவ் வெண்ணம் தோன்றியவுடனே, அவள் கண்கள் அவளேயும் அறியாமல் நீர் மல்கின தலைவியின் இச் செயல்களையும், அவள் உள்ளத் துடிப்பினேயும் தோழி உணர்ந்தாள் ; அவள் உள்ளம் கல்லன்று ; அவள் உள்ளமும் கசிந்தது ; இவ்வாறு வருந்த வருந்த வெளியேறுவதிலும், கிகழ்ந்தன வற்றைத் தாய்க்கும் பிறர்க்கும் உணர்த்தி, மேல் நிகழக் கடவனவற்றை மேற்கொள்வதே நன்று எனத் துணிக் தாள்; தலைவியை விட்டுத் தலைவன்பால் சென்ருள்.

'ஐய கின்னெடுவரத் தலைமகளும் இசைந்தாள் ; போக்கிற்கு ஆவனவற்றையும் மேற்கொண்டாள் ; ஆனால்; அவள் உள்ளம் வருந்தி வாடுகிறது; அவள் கண்கள் அவளே அறியாது ர்ே சொரிகின்றன; இங்கிலேயில், உடன்போக் கினை மேற்கொள்ள என் உள்ளம் அஞ்சுகிறது; என் செய் வேன் ஆதலின், உடன்போக்கினத் தவிர்வதே நலமாம்” என்று கூறினுள் ; உடன்போக்கும் கின்றது.

  • வைகுபுலர் விடியல் மெய்காந்து, தன்கால்

அரி அமை சிலம்பு கழி இப், பன்மாண் வரிபுனை பங்தொடு வைஇய செல்வோள், இவை காண்தொறும் கோவர் மாதோ!

அளியரோ! அளியர் ! என் ஆயத்தோர் என தும்மொடு வாவுதான்் அயாவும் - தன்வரைத் தன்றியும் கலுழ்ந்தன கண்ணே. (ஏற்: கஉ)