பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎博_j மஞர் 29

இப்பாட்டில், கற்பொழுக்கநெறி நின்ற நற்குடிப் பிறந்தாள் ஒருத்தி, காதல்வாழ்வினை விரும்பிப் பெற்று வளர்த்த தாயையும், பிறந்ததுமுதல் உடன் ஆடிப் பழகிய ஆயத்தாரையும் பிரிந்து செல்வதா ? அல்லது, இவர்பால் கொண்ட அன்புடைமையால் இவரைப் பிரிய அஞ்சிக் காதல்வாழ்வினைக் கைவிடுவதா எனத் துணிய இயலாது நடுங்கும் உள்ளத்தின் தடுமாற்றமும், உடன்போக்கே உறுதி பயப்பதாம் எனினும், அது, தலைவியின் உளம் வருந்த கிகழ்தல் கூடாது என உணரும் தோழியின் உள் ளத்தின் உயர்வும் உணர்த்தப்பட்டுள்ள திறங்கண்டு மகிழ்க.

உடன்போக்கு கின்று விட்டது ; அவர்கள் அன்பு வாழ்க்கையினைத் தமர்க்கு உணர்த்தி அறத்தொடு கிற்க விரும்பினுள் தோழி , ஆனால், அதை எவ்வாறு உணர்த்து வது என அறியாது, உணர்த்தும் உள்ளத்துணிவும் இன்றி மயங்கியிருந்தாள் ; இவ்வாறு சின் னுட்கள் சென்றன ; தமர், வீட்டிற்கு வெள்ளையடித்துச் செம்மண்பூசி அழகு செய்வாராயினர் ; தெருவில் புது மணல் பரப்புவாராயினர்; தாமும் தேன்முதலாம் இனியநீர் உண்டு மகிழ்வாராயினர்; தமரின் இச்செயல்கள் தோழிக்கு ஐயத்தை அளித்தன ; அவள் உள்ளம் அவர்களின் இச்செயல்களுக்குக் காரணம் அறியத் துடித்தது. அங்கிலையில், “எம் மகள் மணவிழா ஏற்பாடுகள் இவை” என அவர்களே கூறியும் விட்டனர்; அவர்கள் கூறுவதைக் கேட்டாள் கோழி, தலைமகள் இனி யும் ஈண்டே இருத்தல் அவள் கற்பிற்குக் கேடு பயக்கும் என உணர்ந்தாள் ; ஈண்டு இருந்து அவர் மேற்கொள்ளும் மணத்திற்கு இசையின், கற்புக் கெடும்; இசையாது மறுத் தலோ இயலாது ; ஆகவே, உடன்போக்கினே உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் துணிந்தாள் ; பெற்ருேரை யும் பழகியோரையும் பிரிந்து செல்வதா P என்ற எண்ணம் அப்போது அவள் உள்ளத்தில் இடம் பெறவில்லை; தலைமக ளின் கற்புநெறி வாழவேண்டும் என்ற எண்ணத்தின்முன் தாயன்பும், ஆயத்தார் நட்பும் கில்லாது மறைந்து மாய்ர்