பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86. உவமையாற் பெயர்பெற்றோர்



களைக் காண்பனே ; மணமுரசு முழங்க, ஊரார் எல்லாம் தங்கள் வீட்டு மணமெனக் கருதி விழாக்கொண்டாட மணம் நிகழும்; அம் மணவிழாக்கண்டு, யானும் நற்றாயும் மகிழ்வோம்; இவ்வாறு எல்லாரும் மகிழ மணஞ்செய்து உடன் கொண்டுபோகத் தவறிவிட்டனனே என்றும், சென்றவன், தளரும் இளமைப் பருவத்தாள் இவள்; இவள் வருந்தா வண்ணம் கோடையின் வெம்மை நீங்கிக், குளிர்ந்தகாலத்தில் கொண்டு சென்றிருத்தல் கூடாதா! மழை இல்லாமையால் கல்லும் உருகும் கடுமைதோன்றும் கொடிய இக் கோடையில் கொண்டு சென்றனனே என்றும் வருந்துவாளாயினள்; மகளிடத்தும் மகள் காதலனிடத்தும் அவள் கொண்டுள்ள அன்புதான்் என்னே !


“என்மகள் பெருமடம் யான்பாராட்டத்,
தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப,
முழவுமுகம் புலசா விழவுடை வியனகர்
மணனிடை யாகக் கொள்ளான், கல்பகக்
கணமழை துறந்த கான்மயங் கழுவம்
எளிய வாக மாஅ யோட்குஎனத்
தணிந்த பருவம் செல்லான்.

(அகம் : கூகன)

அவள் அன்பு அம்மட்டோடு நிற்கவில்லை. என் மகள் மழையும் நிழலும் இல்லா மலைவழியில் செல்கின்றனளே! அந்தோ! அவற்றின் கொடுமையினை எங்ங்னம் ஆற்றுவள்? அவள் சென்றவழியில் ஞாயிறு காயாது மறையானா? மரங்களெல்லாம் தழைத்து நிழலைத் தாராவோ? மலைவழி களில் மண்ல் பரவாதா?. மழைபெய்து வழி தண்ணெனக் குளிராதா?’ என்று ஏங்கினாள்; 'அவள் சென்றவழி அவ்வாறே இனிதாக அருள்புரிவாயாக’ என ஆண்டவனே நோக்கி வேண்டினாள் ;

ஞாயிறு காயாது, மரம் நிழல்பட்டு,
மலைமுதற் சிறுநெறி மணல்மிகத் தாஅய்த் தண்மழை கலையின் றாக ! நம் நீத்துச்