பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. உவமையாற் பெயர்பெற்ருேர்

மாட்டு மாருச் சினம் பிறந்தது; அவனைப் பழிக்கத் துணிந்தது அவள் நா; ஆனல் அவனைப் பழிப்பதால் உண்டாகும் ஏதம் தன் மகளையும் சாருமே என எண்ணி ள்ை; உடனே அவனைப் பழிப்பதற்குமாருக, இத்தகைய ஆண்மகனைப் பெற்ருளே அவளைப் பழிக்கவேண்டும் என்று எண்ணிற்று அவள் உள்ளம்; உடனே மகளை இழந்து வருந்தும் என்னைப்போன்றே, வன்கண்காளையை ஈன்ற தாயும் பெருந் துன்புறுவாளாக என்று பழித்தாள்.

  • எம் போல்

பெருவிதுப் புறுக மாதோ எம்மில் பொம்ம லோதியைத் தன்மொழிக் கொளிஇக் கொண்டுடன் போக வலித்த வன்கட் காளையை ஈன்ற தரயே.” (நற் : உகங்.)

சென்ற தன் மகளை, அவள் காதற் கொழுநனேடு அழைத்துவந்து மணமுடித்து மகிழ்ந்து காணவிரும்பு கின்ருள்; அங்கிலையில் ஒருத்திவந்து, தன் மகனும், கின் மகளும், தன் மனேக்கே வருவர் என்று கொண்டு, தலை மகனைப் பெற்றதாய், வீட்டுச் சுவரில் செம்மண் பூசி, முன்னிடத்தே மணலைப்பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு வரவேற்பிற்கானவற்றை மகிழ்ந்து மேற்கொண்டுளாள் என்று கூறினுள்; ஆனல் தலைமகள் நற்ருய்க்கு, அவர் களைத் தன் வீட்டிலேயே முதலில் வரவேற்க வேண்டும் என்ற விருப்பம்; ஆனால், மகளே உடன் கொண்டுசென்ற அவ் வாண்டகை, அவளே முதலில் தன் வீட்டிற்குக் கொண்டு செல்வனே? அன்றித் தலைமகள் வீட்டிற்கு அழைத்துவருவனே அதை யாரும் அறியார்; அறிந்து கொள்ளத் துடித்தது நற்ருய் உள்ளம்; ஆவது அறிந்து கூறவல்ல வேலனை அழைத்தாள்; தலைவன் கருத்து யாதாம் என்பதை அறிந்து கூறுமாறு அவனே வேண்டி

னுள். நற்ருயின்கிலே இது.

“ அருஞ்சுரம் இறந்த என் பெருங் தோட்குறுமகள் கிருந்தவேல் விடலையொடு வருமெனத்தாயே