பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உவமையாற் பெயர்பெற்ருேர்

அதுகுறித்து வருக்கி அழுதுகொண்டிருப்பது அழ கன்று; ஆற்றியிருப்பதே அறிவுடையோர்க்கு அறமாம்' என்ற அறம் கிறைந்த அறிவுரை கூறினுள்.

தலைமகள் அது கேட்டாள்; இவள் நம் உயிர்த் தோழி; நம் உள்ள்ம் உணர்ந்தவள்; காதலின் ஆற்றலையும், காதல் இயல்பையும் உணராதவள் அன்று ; கணவரைப் பிரிந்த பெண்டிர்படுங் கொடுத்துயரை உணர்ந்தவள் ; இவளே இவ்வாறு கூறுகின்றனளே ” என்று எண்ணி ள்ை. அவள்மீது பெருஞ்சினம் பிறத்தது; பிறரை கோக்கிக் கூறுவாள்போல், தோழியின் உள்ளத்தே படு மாறு, காமநோயைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்ற னர்; அவ்வாறு கூறுகின்றவர்கள் ஒன்று காமம் என்பது என்ன என்றே அறியாப் பேதையராதல் வேண்டும்; காணேயும், கல்லாண்மையையும் அழிக்கவல்ல ஆற்றலுடை யது கர்மம்; கணவரைப் பிரித்து கணித்துறையும் மகளி சைத் தெ.அாஉம் இயல்புடையது காமம் என்ற உண்மை யினே உணராதவராதல் வேண்டும் ; அல்லது, அத்தகைய ஆற்றல்வாய்ந்த காமகோயினேப் பொறுத்துக்கொள்ளவல்ல பேராற்றலைத் தாம் பெற்றவராதல் வேண்டும்; அதனல் தான்், காதலென்பது என் பூதமோ பேயோ? வெருட்டினுல் காய்போல் ஓடிடும்; வெருவில் துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை என்றெல்லாம் உரைக்க முன்வந்துவிடுகின்றனர்; அத்துணை ஆற்றல் எனக்கில்லை; காதலரைச் சிறிதுபோது காணுதுவிடினும் உள்ளம் உறுதுயர் கொண்டுவிடுகிறது; உள்ளத்துயருக் கேற்ப உடல் நலனும் சிறிது சிறிதாகக் குன்றத் தொடங்கி விடுகிறது; பான் என் செய்வேன்; யாரொடு கோகேன் ; யார்க் கெடுத்துரைப்பேன்’ என்று கூறுவாளாயினள்.

இப்பொருள் அமைந்த பாடலைப் பாடிய புலவர், காதலரைக் காணமாட்டாக் கடுந்துயருடையாளொடு கலைமகளின் உடல்நலம் சிறிதுசிறிதாகக் கெட்டு ஒழிவ தற்குப் பெருநீரில் மிதந்துவக்க சிறு திரைத்திரள் ஒன்று,